திருமண தேதியை அறிவித்த விஜய் டிவி சீரியல் நடிகர்கள்!

Published : Jan 27, 2025, 07:45 PM IST

'கனா காணும்' காலங்கள் வெப் சீரிஸில் நடித்த சங்கீதா மற்றும் அரவிந்த் சேஜூ இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில்,இவர்களின் திருமண தேதியை இப்போது அறிவித்துள்ளனர்.  

PREV
14
திருமண தேதியை அறிவித்த விஜய் டிவி சீரியல் நடிகர்கள்!
தமிழும் சரஸ்வதியும்

சனி மியூசிக்கில் தொகுப்பாளராக தன்னுடைய பணியை துவங்கியவர் விஜே சங்கீதா. சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் நடித்த இவர் அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்தார். கடந்த ஆண்டு முடிவடைந்த விஜய் டிவி சீரியலான 'தமிழும் சரஸ்வதியும்' தொடரில் நடித்திருந்தார். அதே போல் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பான  கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் மலர் டீச்சராக நடித்த சங்கீதாவுக்கு இந்த வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

24
கனா காணும் காலங்கள் வெப் தொடர்

இந்த சீரிஸில் கலையரசன் (கலை) என்ற ரோலில் நடித்தவர் தான் அரவிந்த் சேஜூ. இந்த சீரிஸில் நடித்த தீபிகா வெங்கடாஜலம் (அபி) மற்றும் ராஜா வெற்றி பிரபு (கௌதம்) இருவரும் கடந்த 2023-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இப்போது இந்த சீரிஸில் நடித்த 2ஆவது ஜோடியும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

பிக்பாஸ் ஹிந்தியில் கலக்கிய ஸ்ருதிகா வெளியிட்ட திருமண போட்டோஸ்!

34
சங்கீதா மற்றும் அரவிந்த் சேஜூ

கடந்த ஆண்டு தங்களின் காதலை புகைப்படம் வெளியிட்டு அறிவித்த சங்கீதா மற்றும் அரவிந்த் சேஜூ இருவரும் . தற்போது திருமண செய்தியை உறுதி செய்துள்ளனர். அதன்படி வரும் பிப்ரவரி 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சங்கீதா மற்றும் அரவிந்த் சேஜூ திருமணம் நடைபெற உள்ளதாம். கொரோனாவின் போது அரவிந்த் சேஜூவின் பெற்றோர்கள் இறந்துவிட்ட நிலையில், இந்த திருமணத்தை அவரது அண்ணன்கள் முன்னின்று நடத்துவதாக கூறப்படுகிறது. 

44
திருமண தேதியை அறிவித்த சின்னத்திரை ஜோடி

விஜய் தொலைக்காட்சியில் இன்று முதல் மாலை 7:30 மணிக்கு டெலிகாஸ்ட் ஆக உள்ள அய்யனார் துணை என்ற சீரியலில் அரவிந்த் சேஜூ லீடு ரோலில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக எதிர்நீச்சல் சீரியல் நாயகி மதுமிதா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடிகளுக்கு இப்போதே ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க துவங்கி விட்டனர்.

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

click me!

Recommended Stories