Ajith Kumar Join With Vishnuvardhan For New Movie
Ajith Kumar Salary for His New Movie : 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டு அஜித்துக்கு அளவு கடந்த சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து வருகிறது. 2024ல் அஜித் நடிப்பில் எந்தப் படமும் வெளிவரவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்று அடுத்தடுத்து 2 படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. விடாமுயற்சி பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக தள்ளிப் போனது. இதையடுத்து வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
Ajith Kumar Salary For His New Movie
இது ஒரு புறம் இருந்தாலும் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித் தலைமையிலான அணி கலந்து கொண்டு 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தது. கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்து கொடுத்த போது அஜித் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. துள்ளிக் குதித்து கொண்டாடி மகிழ்ந்தார். இதையடுத்து குடியரசுத் தினத்திற்கு முன்னதாக அஜித்திற்கு நாட்டின் உயரிய விருதான பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
Ajith Kumar and Vishnuvardhan Movie
விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு போன்று இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு அஜித்துக்கு ரூ.200 கோடி சம்பளம் கொடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Ajith Kumar Highest Salary
இதற்கு முன்னதாக மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி படத்திற்கு அஜித் ரூ.105 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இதே போன்று குட் பேட் அக்லி படத்திற்கு அஜித் ரூ.163 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த 2 படங்களை விடவும் புதிதாக நடிக்கும் படத்திற்கு முதல் முறையாக அஜித் ரூ.200 கோடி சம்பளம் கொடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.