'வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா'..மொழி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் விஜய் ?

Kanmani P   | Asianet News
Published : Apr 13, 2022, 01:15 PM IST

முன்னணி நடிகர்களின் படத்தின் மூலம் அரசியல் விமர்சனம் எழுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. அந்த வகையில் விஜய் பீஸ்ட் படத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

PREV
18
'வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா'..மொழி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் விஜய் ?
beast

நெல்சன் இயக்கத்தில் தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில் நல்ல வசூலை தட்டி செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

28
beast

பீஸ்ட்டில் யோகி பாபு, விடிவி கணேஷ், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோரும்,, ஹீரோயீன் பூஜா ஹெக்டேவும் செய்யும் காமெடி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. 

38
beast

படத்தில் பாதுகாப்பு படையிலிருந்து விலகும் வீரராகவன் (விஜய் ) பின்னர் விடிவி கணேஷ் நடத்தும் செக்யூரிடி நிறுவனத்தில் தான் விஜய் வேலைக்கு சேருகிறார். அவர் வேலை பார்க்கும் மால் தான் ஹேஜேக் செய்யப்படுகிறது.

48
beast

இந்திய அரசால் கைது செய்யப்பட்ட ஒரு மோசமான தீவிரவாதியை விடுதலை செய்தால் மட்டுமே அங்கு பிணை கைதிகளாக வைக்கப்பட்டுள்ள மக்களை உயிரோடு விடுவோம் என்று தீவிரவாதிகள் மிரட்டல் விடுகின்றனர்.

58
beast

மாட்டிக்கொள்ளும் மக்களுடன் விஜயும் இருக்கிறார். பின்னர் அந்த தீவிரவாதிகளிடம்  இருந்து எவ்வாறு மக்களை விஜய் காப்பாற்றுகிறார் எனபதே இந்த படத்தின் மையக்கரு. இதற்கிடையே காதல், காமெடி என படம் நீள்கிறது.

68
beast

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இயக்குனர் விஜய்க்கு பில்டப் கொடுக்கும் அமைச்சர் கேரக்டரில் நடித்திருப்பது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

78
beast

என்ன தான் சொதப்பல்கள் இருந்தாலும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தான் வருகின்றனர். அதோடு வசூலும் நல்ல லாபத்தை கொடுக்கும் என்பது ப்ரீ புக்கிங் மூலம் தெரிகிறது.

88
beast

இதற்கிடையே படத்தின் பர்ஸ்ட் ஷோ முடிந்த கையோடு அரசியல் சர்ச்சையை கிளப்பி விட்டு விட்டனர். படத்தில் வரும் ஒரு காட்சியில் 'உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா, எல்லா தடவையும் இந்தியை ட்ரான்ஸ்லேட் பண்ணிட்டு இருக்க முடியாது’ என்ற வசனத்தைப் பேசுகிறார் விஜய்.  இதை இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்தார் விஜய் என வைரலாக்கி வருகின்றனர். 

Read more Photos on
click me!

Recommended Stories