சிம்புவின் புது ஆரம்பம்! பாட்ஷா கெட்டப்பில் அப்டேட் சொன்ன STR

Published : Apr 13, 2022, 12:17 PM IST

சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட்டை முடித்துள்ள சிம்பு அடுத்தாக ஆட்டோகாரன் கெட்டப்பில் நியூ ப்ராஜக்ட் ஆரம்பிக்கவுள்ளார் என்பது அவரது ட்வீட் மூலம் தெரிகிறது.

PREV
18
சிம்புவின் புது ஆரம்பம்! பாட்ஷா கெட்டப்பில் அப்டேட் சொன்ன STR
simbu

திரையுலகில் மோசமான விமர்சங்களை பெற்று வந்த சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. 

28
simbu

.மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து இவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு, 10 தல, கொரானா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

38
simbu

இந்த படங்களின் படப்பிடிப்பு முடித்தப்பிறகு ராம் இயக்கத்திலும் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக உடல் எடை கூடியிருந்த சிம்பு கடும் முயற்சிக்கு பிறகு பழைய நிலைக்கு திரும்பினார்.

48
simbu

இதற்கிடையே ஈஸ்வரன் படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த நிதி அகர்வாலுடன் விரைவில் சிம்புவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும். அதற்காக சிம்பு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

58
simbu

இந்த நிலையில் 24 மணி நேரமும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பானது.  இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த  நடிகர் கமல்ஹாசனே 3 வாரத்திற்கு பிறகு விக்ரம் 2 படப்பணிகளில் கலந்து கொள்வதற்காக விலகி விட்டார்.

68
simbu

இதையடுத்து கமலுக்கு பதிலாக அல்டிமேட் தொகுப்பாளராக சிம்பு களமிறங்கினார். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆதரவை பெற்றார் சிம்பு.

78
simbu

கடந்த ஞாயிற்று கிழமை பிக் பாஸ் முடிவடைந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர் போன்ற கெட்டப்பில் இருந்த சிம்பு ஆட்டோ ஓட்டும் வீடியோ வைரலானது.

88
simbu

இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் உடையில் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ள சிம்பு 'உங்களுக்காக ஒரு புது update. புது ஆரம்பம்! ' என குறிப்பிட்டுள்ளார் அதோடு  #தமிழால்_இணைவோம் #TamilConnects என ஹேஸ் டேக் செய்துள்ளார். முன்னதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories