விடாமல் துரத்தும் கே.ஜி.எஃப் 2..! வசூலில் முந்துமா விஜய்யின் பீஸ்ட்..?

Kanmani P   | Asianet News
Published : Apr 13, 2022, 10:56 AM ISTUpdated : Apr 13, 2022, 10:57 AM IST

கே.ஜி.எஃப் 2..படத்தின் ப்ரீ புக்கிங் கலெக்சன்ஸ் உலகம் முழுவதும் 56.6 கோடியை கடந்துள்ளதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

PREV
16
விடாமல் துரத்தும் கே.ஜி.எஃப் 2..! வசூலில் முந்துமா விஜய்யின் பீஸ்ட்..?
beast

பீஸ்ட் படம் இன்று வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும்  கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

26
beast

உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த படம் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதோட ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களில் சொற்ப திரையரங்குகளில் மட்டுமே பீஸ்ட் வெளியாகியுள்ளது.

36
KGF 2

விஜய்க்கு கணிசமான ரசிகர் பட்டாளம் இருக்கும் மாநிலங்களில் கூட போதுமான மவுசு பீஸ்டுக்கு கிடைக்காமல் போனதற்கு கே.ஜி.எஃப் 2 மறு நாளே வெளியாவது தான் எனவும் கூறப்படுகிறது.

46
KGF 2

கே.ஜி.எஃப் 2 - பீஸ்ட் என இரு படங்களும் அதிகப்படியான மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியிருந்தாலும் கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் வெற்றி இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் பல வருடத்திற்கு முன்னரே விதைத்து விட்டது.

56
KGF 2

அதோடு பீஸ்ட் டிக்கெட் மற்ற மாநிலங்களில்  kgf 2 வை விட மேலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதாம். இதுவும் பீஸ்ட் படத்திற்கு பாதகமாக அமையலாம் என கணிக்கப்படுகிறது.

66
KGF 2

இந்நிலையில் KGF 2 உலகம் முழுவதும் ப்ரீ புக்கிங் மூலம் இதுவரை பெற்றுள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்பாடு சுமார் 53.6 கோடியை நேற்றைய நிலவரப்படி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories