நெல்சன் - விஜய் கூட்டணி
நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய நெல்சன், தற்போது முதன்முறையாக நடிகர் விஜய் உடன் கூட்டணி அமைத்துள்ளார். பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோயினாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.