அடுத்த டிரைலருக்கு ரெடியா! புது போஸ்டருடன் பீஸ்ட் படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - எப்போ ரிலீஸ் தெரியுமா?

Published : Apr 03, 2022, 04:41 PM IST

Beast Trailer : பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூப்பில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நிலையில், தற்போது அடுத்த டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

PREV
14
அடுத்த டிரைலருக்கு ரெடியா! புது போஸ்டருடன் பீஸ்ட் படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு - எப்போ ரிலீஸ் தெரியுமா?

நெல்சன் இயக்கத்தில் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது பீஸ்ட். தளபதி விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதுதவிர ரெடின் கிங்ஸ்லி, டான்ஸர் சதீஷ், செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

24

இப்படத்தில் நடிகர் விஜய், வீர ராகவன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பயங்கரவாதிகளால் ஹைஜாக் செய்யப்படும் வணிக வளாகத்தில் உள்ள பொதுமக்களை நாயகன் எப்படி மீட்கிறார் என்பதே படத்தின் கதை. நெல்சன் - விஜய் முதன்முறையாக இணைந்து பணியாற்றும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், அதேபோல் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

34

பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. இப்படம் இந்தியில் மட்டும் ரா என்ற பெயரில் ரிலீசாக உள்ளது. மற்ற 4 மொழிகளிலும் பீஸ்ட் என்ற பெயரில் தான் வெளியிட உள்ளனர்.

44

பீஸ்ட் படத்தின் தமிழ் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த அந்த டிரைலர் யூடியூப்பில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில், பீஸ்ட் படத்தின் அடுத்த டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் தெலுங்கு டிரைலர் வருகிற ஏப்ரல் 5-ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... Vijayendra Prasad : RRR இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கா? - உண்மையை போட்டுடைத்த ராஜமவுலியின் தந்தை

Read more Photos on
click me!

Recommended Stories