பீஸ்ட் மோடில் விஜய்
விஜய் - நெல்சன் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து இருக்கிறார். மேலும் யோகிபாபு, விடிவி கணேஷ், ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
ஏப்ரல் மாதம் ரிலீஸ்
நண்பன் பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு உள்ளது.
அடுத்தடுத்து அப்டேட் ரெடி
பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படம் குறித்த அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அதன்படி வருகிற மார்ச் 20-ந் தேதி சென்னையில் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து வருகிற ஏப்ரல் 2-ந் தேதி இப்படத்தின் டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
பீஸ்ட் ரிலீஸ் தேதி மாற்றம்
பீஸ்ட் படத்தை முதலில் ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியிட திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் அன்றைய தினம் யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 படம் வெளியாவதால், பீஸ்ட் படக்குழு ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 13-ந் தேதி வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முதல் நாள் வசூல் பாதிக்கக்கூடாது என்பதற்காக பீஸ்ட் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை படக்குழு வெளியிட உள்ளார்களாம்.
இதையும் படியுங்கள்... Actor Vijay :முதல்வர் சொன்னத ஃபாலோ பண்ணுங்க நண்பா.. விஜய் ரசிகர்களுக்கு பறந்த உத்தரவு- ஸ்டாலின் ரூட்டில் தளபதி