முதல் படமே ஹிட்
கற்றது தமிழ், தங்க மீன்கள் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மாரி செல்வராஜ். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் டைரக்டராகஅறிமுகமானார். பா.இரஞ்சித் தயாரித்திருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த மாரி செல்வராஜுக்கு, தனது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் தனுஷ்.
முன்னணி இயக்குனராக உயர்த்திய கர்ணன்
இந்த பொன்னான வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொண்ட மாரி செல்வராஜ், தனுஷை வைத்து கர்ணன் என்கிற மாபெரும் ஹிட் படத்தைக் கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்த இப்படம் பல்வேறு விருதுகளையும் வென்று வருவதோடு, பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
விக்ரம் மகனுடன் கூட்டணி
இதைத் தொடர்ந்து நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார் மாரி செல்வராஜ். இப்படத்தை பா.இரஞ்சித்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங்விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உதயநிதியுடன் மாமன்னன்
இதுதவிர உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தையும் இயக்க ஒப்பந்தமானார் மாரி செல்வராஜ். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், நகைச்சுவை நடிகர் வடிவேலு காமெடியனாக நடிக்க உள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தனர்.