பீஸ்ட் ஆடியோ லாஞ்ச்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். கடந்த சில ஆண்டுகளாக இவர் தான் பங்கேற்கும் ஆடியோ லாஞ்ச் விழாக்களில் அரசியல் பேசி அதகளம் செய்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அவரது அரசியல் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
ரசிகர்கள் ஏமாற்றம்
ஆனால் தற்போது கொரோனா பரவும் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என படக்குழு முடிவு செய்துள்ளது. விஜய்யின் பேச்சை கேட்க ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு இந்தத் தகவல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீஸ்ட் அப்டேட்
செம அப்செட்டில் இருந்த விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நேற்று பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டது. அதன்படி விஜய் பாடியுள்ள ஜாலியோ ஜிம்கானா என்கிற பாடல் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
பீஸ்ட் இசை வெளியீட்டு விழா நடக்காவிட்டாலும் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் சில சர்ப்ரைஸ் பிளான்களை படக்குழு வைத்துள்ளதாம். அதன்படி துபாயில் நடைபெற்றுவரும் எக்ஸ்போவின் இறுதி நாளான மார்ச் 31-ந் தேதி பீஸ்ட் படத்தின் டிரைலரை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.