Shah Rukh Khan : ஓடிடி-யும் இல்ல.. ஒன்னும் இல்ல - ரசிகர்களை ஏமாற்றிய ஷாருக்கான்... அப்போ SRK பிளஸ்-னா என்ன?

First Published | Mar 17, 2022, 6:17 AM IST

Shah Rukh Khan : அண்மையில் SRK+ என்கிற விளம்பரத்தை வெளியிட்டார் ஷாருக். இதைப்பார்த்த ரசிகர்கள் அது அவர் புதிதாக தொடங்க உள்ள ஓடிடி தளத்திற்கான அறிவிப்பு என கருதி வந்தனர். 
 

4 ஆண்டுகள் வெயிட்டிங்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக் கான். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஜீரோ. இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான. இதற்கு பின் 4 ஆண்டுகள் ஆகியும் இவர் நடித்த படங்கள் வெளியாகவில்லை. இவர் நடிப்பில் தற்போது பதான் திரைப்படம் உருவாகி வருகிறது.

விறுவிறுப்பாக தயாராகும் பதான் 

பதான் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவும், வில்லனாக ஜான் ஆபிரஹாமும் நடித்து வருகின்றன். பிரம்மாண்ட பொருட் செலவில் தயாராகி வரும் இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 25-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

அட்லீ இயக்கத்தில் ஷாருக்

இதுதவிர அட்லீ இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார் ஷாருக். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன் தாரா நடிக்கிறார். இப்படத்திற்கு லயன் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்து இதுவரை படக்குழுவோ ஷாருக்கானோ எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியிடவில்லை.

புது ஓடிடி தளமா?

இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் ஷாருக்கான், கடந்த சில தினங்களுக்கு முன்னர் SRK+ என்கிற விளம்பரத்தை வெளியிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் அது ஷாருக்கான் புதிதாக தொடங்க உள்ள ஓடிடி தளத்திற்கான அறிவிப்பு என கருதி வந்தனர். அந்த விளம்பரமும் வைரலாகி வந்தது.

SRK பிளஸ்-னா என்ன?

இந்நிலையில், அது குறித்த உண்மை தகவல் வெளியாகி உள்ளது. SRK+ என்பது ஓடிடி தளத்திற்கான அறிவிப்பு இல்லையாம். இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் விளம்பரமாம். இதனை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அஜய் தேவ்கன் ஷாருக்கான் அனைவரையும் பிராங்க் செய்ததாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஷாருக்கான் எந்த ஓடிடி தளமும் ஆரம்பிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... Actor Dhanush : மாறன் தந்த மரண அடி... வேறு வழியின்றி மீண்டும் வெற்றிமாறனை நாடும் தனுஷ்?

Latest Videos

click me!