2022-ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாப்10 படங்களின் பட்டியல்! லிஸ்ட்லயே இல்லாத அஜித்.. ஆதிக்கம் செலுத்திய விஜய்

Published : Oct 19, 2022, 12:30 PM IST

2022-ல் வெளியான படங்களில் ரிலீசுக்கு முன் மக்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்கள் என்னென்ன என்பது குறித்த டாப் 10 பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. 

PREV
111
2022-ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாப்10 படங்களின் பட்டியல்! லிஸ்ட்லயே இல்லாத அஜித்.. ஆதிக்கம் செலுத்திய விஜய்

உலக அளவில் வெளியான படங்களை தர மதிப்பீடு செய்து, அதனை பட்டியலிடும் தளம்தான் IMDb. இந்த தளம் இந்த ஆண்டு வெளியான இந்திய படங்களில் ரிலீசுக்கு முன் மக்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்கள் என்னென்ன என்பதுகுறித்த டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்ட்டில் இந்தி மற்றும் தெலுங்கு படங்கள் அதிகளவில் இருந்தாலும் தமிழ் படம் ஒன்றே ஒன்று தான் இடம்பெற்று உள்ளது. அதன் விவரத்தை தற்போது பார்க்கலாம்.

211

கே.ஜி.எஃப் 2

2022-ல் வெளியான படங்களில் அதிக எதிர்பார்ப்புடன் ரிலீசான படங்கள் பட்டியலில் யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த படத்திற்கு அதிகபட்சமாக 8.4 ஸ்டார் கிடைத்துள்ளதோடு 1 லட்சத்து 27 ஆயிரம் ஓட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்த ஆண்டு ரிலீசாகி அதிக வசூல் ஈட்டிய படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

311

ஆர்.ஆர்.ஆர்

IMDb தளம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் ரிலீசான இப்படத்திற்கு 8 ஸ்டார் கிடைத்துள்ளதோடு 1 லட்சத்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுக்களை பெற்றுள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

411

லால் சிங் சத்தா

அமீர்கான் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீசான லால் சிங் சத்தா திரைப்படம் அதிக எதிர்பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இப்படம் 5.4 ஸ்டார்களை மட்டுமே பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது.

511

கங்குபாய் கத்தியவாடி

ஆலியா பட் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசான படம் கங்குபாய் கத்தியவாடி. இப்படத்தில் விலை மாதுவாக நடித்திருந்தார் ஆலியா பட். இப்படத்திற்கு IMDb தளத்தில் 7 ஸ்டார்கள் கிடைத்துள்ளன. 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று இப்படம் இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது.

611

பீஸ்ட்

IMDb தளம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் படம் பீஸ்ட் மட்டும் தான். இப்படம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ரிலீசுக்கு முன் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை துளி அளவு கூட பூர்த்தி செய்யாத இப்படம் படு தோல்வியை சந்தித்தது.

இதையும் படியுங்கள்... நடிகர் சின்னி ஜெயந்த் மகன் துணை ஆட்சியராக பொறுப்பேற்பு..

711

தக்கட்

கங்கனா நடிப்பில் வெளியான தக்கட் திரைப்படம் இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. பாலிவுட்டில் கங்கனா நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ஹிட் ஆனதால் தக்கட் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் இப்படம் படுதோல்வியை சந்தித்தது.

811

ராதே ஷியாம்

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்த படம் தான் ராதே ஷியாம். ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் 7-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ரிலீசான இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் இழப்பை சந்தித்து பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது.

911

பிரம்மாஸ்திரா

பாலிவுட்டில் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இணைந்து நடித்திருந்த படம் பிரம்மாஸ்திரா. இப்படம் பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படம் என்பதால் இப்படத்தின் மீது ரிலீசுக்கு முன்பே அதிகளவிலான எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் இந்த லிஸ்ட்டில் 8-வது இடத்தை பிடித்துள்ளது பிரம்மாஸ்திரா. இப்படம் கடந்த மாதம் ரிலீசாகி ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

1011

ஹீரோபண்டி 2

டைகர் ஷெராஃப் நடிப்பில் வெளியான இந்தி படம் தான் ஹீரோபண்டி 2. இப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதால் இப்படத்தின் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு இருந்ததால் இந்த பட்டியலில் 9-வது இடம் பிடித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இருப்பினும் முதல் பாகம் அளவுக்கு இப்படம் வரவேற்பை பெறவில்லை.

1111

ஆதிபுருஷ்

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆதிபுருஷ். ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படத்தில் ராமராக நடித்துள்ள பிரபாஸ். பிரம்மாண்ட பட்ஜெட் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இந்த பட்டியலில் 10-வது இடம் பிடித்துள்ளது ஆதிபுருஷ். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... விக்ரம் ஜோடியாக ‘பூ’ பார்வதி... முக்கிய ரோலில் சார்பட்டா நடிகர்..! சியான் 61 படத்தின் விறுவிறு அப்டேட்ஸ் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories