ஓடிடி தளங்கள் சினிமாவின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. கொரோனா ஊரடங்கு சமயத்தில் படங்களை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி செய்தால் திரையரங்குகள் அழிந்துவிடும் என்றெல்லாம் கவலைப்பட்டனர். பின்னர் நாளடையில் ஓடிடிக்கென தனியாக படங்களும் தயாரிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த அளவுக்கு ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளன.
திரையரங்கில் வெளியாகும் படங்களுக்கும், ஓடிடி உரிமையை விற்பதன் மூலம் பெரும் தொகை கிடைத்து வருகிறது. இதனால் ஓடிடி தளங்கள் திரைத்துறையினருக்கு ஒரு வரப்பிரசாதமாகவே மாறி உள்ளது. அந்த வகையில் வாரந்தோறும் ஏதாவது படங்கள் ஓடிடி-யில் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் வரும் வாரம் தீபாவளி பண்டிகை வருவதால், ஏராளமான படங்கள் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளன. அதன்பட்டியலை தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... மகேஸ்வரியை டார்கெட் செய்த அசீம்... ஒரு ஆள் விடாமல் வச்சு செய்யும் விக்ரமன் - பிக்பாஸ் புரோமோ இதோ