நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு, தமிழ்நாட்டு மருமகளாக மாறிய ஜோதிகா இன்று தன்னுடைய 44 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு இவர் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் டைட்டில் தற்போது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் ஜோதிகா மாற்று மம்மூட்டி பார்ப்பதற்கு மிகவும் யங் லுக்கில் உள்ள போஸ்டர் ஒன்றையும் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜோதிகா திருமணம் ஆகி, குழந்தைகள் பெற்ற பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அப்போதில் இருந்து தொடர்ந்து தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவர், நீண்ட இடைவெளிக்கு பின்னர் மலையாள படத்தில் தற்போது நடிக்க உள்ளார். எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: அசிங்கப்பட்ட ராதிகா... கோபியின் மனைவியாக மேடை ஏறிய பாக்கியா? நடந்தேறிய தரமான சம்பவம்!