நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி இருக்கும் நிலையில், அப்படத்தின் டைட்டிலை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகும் நேரத்தில், அவரது மகன் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். ஆனால் ஹீரோவாக அல்ல இயக்குநராக... அவர் இயக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது. லைகா உடன் சேர்ந்து ஜேசன் சஞ்சய்யும் இப்படத்தை தயாரிக்கிறார். இதன்மூலம் ஒரே படத்தின் வாயிலாக இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைக்கிறார் ஜேசன் சஞ்சய். இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார்.
24
விஜய்யின் ஆசை
ஜேசன் சஞ்சய்யை சினிமாவில் தன்னைப் போல் ஒரு ஹீரோவாக்கி பார்க்க வேண்டும் என்று தான் விஜய் ஆசைப்பட்டார். இதற்காக கதைகளையும் கேட்டு வந்தார். குறிப்பாக பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஜேசன் சஞ்சய்காக ஒரு கதையை தயார் செய்து வந்து சொல்ல, அது விஜய்க்கும் பிடித்துப் போனதாம். தன் மகன் எப்படியாவது அந்த ஸ்கிரிப்டிற்கு ஓகே சொல்ல வேண்டும் என விஜய் வேண்டிக்கொண்டிருக்க, தனக்கு நடிப்பில் இண்டிரஸ்ட் இல்லை என்று சொல்லி அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் சஞ்சய்.
34
இயக்குனராக அறிமுகமான ஜேசன் சஞ்சய்
சரி மகனுக்கு பிடித்ததை செய்யட்டும் என விஜய்யும் விட்டுவிட, அவர் ஸ்கிரிப்ட் எழுதி, அந்த கதையை லைகா நிறுவனத்திடம் சொல்லி, அவர்களுக்கு பிடித்துப் போனதால் தயாரிக்க முன்வந்தனர். பின்னர் ஹீரோ கிடைக்காமல் திண்டாடி வந்தார் ஜேசன் சஞ்சய். கவின் உள்பட ஏராளமான ஹீரோக்களுக்கு அவர் கதை சொல்லி இருந்தாலும் இறுதியாக சந்தீப் கிஷனை அதில் நடிக்க வைத்தார். தற்போது அப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது.
இந்த நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இப்படத்திற்கு சிக்மா என பெயரிடப்பட்டு உள்ளது. இதனுடன் வெளியாகி உள்ள போஸ்டரில், தங்கம், பணக்கட்டுகள், யானை தந்தங்கள் என அனைத்தும் நிரம்பி இருக்க அதன் மீது சந்தீப் கிஷன் அமர்ந்திருக்கிறார். இதைவைத்து பார்க்கும்போது இப்படம் ஒரு கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.