முத்துவுக்கு தெரியவரும் கிரிஷ் பற்றிய ரகசியங்கள்... கையும் களவுமாக சிக்கும் ரோகிணி? சிறகடிக்க ஆசை சீரியல்

Published : Nov 10, 2025, 08:47 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷ் பற்றிய ரகசியங்கள் ஒவ்வொன்றாக முத்துவுக்கு தெரியவந்துள்ளது. அவனின் பெரியப்பாவை முத்து சந்தித்த நிலையில், என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷின் தந்தை சேகரின் அண்ணன் சுப்ரமணி தன்னுடைய மனைவிக்கு 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், அதற்காக சிகிச்சை எடுக்க சென்னை வந்திருக்கிறார். அவர் வித்யாவின் கணவர் முருகனின் உறவினர் என்பதால், அவரை சென்னையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, முத்துவின் காரை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் முத்து வீட்டில் அப்பா தனியாக இருந்ததால், முதல் நாள் செல்லவில்லை. அவருக்கு பதிலாக செல்வத்தை அனுப்பி வைத்தார். பின்னர் இரண்டாம் நாள் சவாரிக்கு அவர்களை அழைத்துச் சென்றிருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
கிரிஷின் பெரியப்பாவை காரில் அழைத்து செல்லும் முத்து

முத்து அவர்களை காரில் அழைத்துச் செல்லும் போது, அவர்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி விசாரிக்கிறான். அப்போது தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததை பற்றி கூறும் அவர்களிடம், நீங்கள் ஏன் குழந்தையை தத்தெடுக்க கூடாது என்பதை பற்றி சொல்கிறான். அதற்கு அவர்களும் நாங்களும் அந்த பிளானில் தான் இருக்கிறோம். என்னுடைய தம்பி மகனை தத்தெடுக்க ஆசைப்படுவதாக கூறியதோடு, தற்போது அவனைப் பார்க்க தான் கோவிலுக்கு செல்கிறோம் என சொல்கிறார். கோவிலுக்கு வந்ததும் அவர்கள் உள்ளே செல்ல, முத்துவிடம் பூ வாங்கிவர சொல்கிறார்கள்.

34
முத்துவுக்கு தெரியவரும் உண்மை

முத்து பூ வாங்கிக் கொண்டு உள்ளே சென்று பார்க்கையில் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. தன்னுடைய காரில் வந்தது கிரிஷின் பெரியப்பா என்கிற விஷயம் அப்போது தான் முத்துவுக்கு தெரியவருகிறது. முத்துவை பார்த்ததும் கிரிஷ் ஓடிப்போய் கட்டிப்பிடித்து விளையாடுகிறார். அதைப்பார்த்த அந்த தம்பதி முத்துவிடம் இவனை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா என கேட்க, அதற்கு அவர் கிரிஷ் கொஞ்ச நாள் எங்க வீட்டில் தான் இருந்தான் என்று கூறுகிறார். பின்னர் லட்சுமி அவசர வேலை இருப்பதாக கூறி கிரிஷை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார். முத்துவும் வீட்டுக்கு வந்துவிடுகிறார்.

44
அதிர்ச்சியில் ரோகிணி

வீட்டுக்கு வந்து கிரிஷின் பெரியப்பாவை பார்த்ததை பற்றி முத்து சொல்ல, அதைக்கேட்டு ரோகிணி ஷாக் ஆகிறார். பின்னர் தன்னுடைய அம்மா லட்சுமிக்கு போன் போட்டு, எதற்காக கிரிஷை அவனுடைய பெரியப்பாவை பார்க்க கூட்டிட்டு போன என சண்டை போடுகிறார். முத்துவுக்கு கிரிஷ் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக தெரியவருவதால் ரோகிணி என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடி போகிறார். இதையடுத்து என்ன ஆனது? கிரிஷின் அம்மா ரோகிணி தான் என்கிற உண்மையை முத்து கண்டுபிடித்தாரா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories