Pandian Stores 2 Serial Promo Video Saravanan Shocking Movement : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் சரவணன் மற்றும் தங்கமயில் தொடர்பான காட்சிகளை வைத்து எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கின்றன.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையில் என்ன நடக்கிறது என்பது குறித்த புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், என்ன நடக்கிறது என்பது பற்றி தொகுப்பில் பார்க்கலாம். விஜய் டிவி வெளியிட்ட புரோமோவில் சரவணன் மற்றும் தங்கமயில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
பாண்டியனின் குடும்பத்தில் சரவணனுக்கு மட்டும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. செந்திலுக்கு காதல் திருமணம், கதிருக்கு காலத்தின் சூழலால் திருமணம் நடந்தது. மேலும், சரவணன் அப்பா பிள்ளை. அப்பாவின் பேச்சை என்றுமே தட்டவே மாட்டார். அதுமட்டுமின்றி அப்பாவை ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேசவும் மாட்டார்.
25
தங்கமயில் சரவணன் சர்ச்சை, ஆதார் கார்டு
ஆரம்பத்தில் சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல தங்கமயில் 12ஆம் வகுப்பு மட்டுமே படித்த நிலையில் அவர் டிகிரி அதுவும் எம்காம் வரையில் படித்திருப்பதாக பொய் சொல்லி சரவணனை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். அதே போன்று தான் நகை விஷயத்திலும்.
வேலைக்கு செல்கிறேன் என்ற பெயரில் ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்த தங்கமயிலை கையும் காலும் பிடித்தார் சரவணன். அன்று ஆரம்பித்தது சரவணனுக்கும் தங்கமயிலுக்கும் இடையிலான பிரச்சனை. இன்றும் ஓயவில்லை. பற்றாக்குறைக்கு இப்போது தங்கமயில் மட்டுமின்றி அவருடைய அப்பா மாணிக்கமும் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்கள்
35
வயதில் மூத்த தங்கமயில், சரவணன் அதிர்ச்சி
பாண்டியன் கடையில் கல்லாவிலிருந்து மாணிக்கம் முதல் நாளில் ரூ.500 எடுத்த நிலையில் அடுத்த நாள் ரூ.1100 பணத்தை ஆட்டையப்போட்டார். இதை சரவணன் பார்த்து தங்கமயிலிடம் சண்டை போட்டார். இந்த சூழலில் கடைசியாக மகளுக்கு தீபாவளி சீர் செய்ய ரூ.10,000 பணத்தை ஆட்டையபோட்டுள்ளார். 2 நாட்களில் திருப்பி தருவதாக கூறியிருக்கிறார்.
இதெல்லாம் கடந்த வார காட்சிகள். இனி இந்த வாரம் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம். தீபாவளிக்கு ஒரு முறை மட்டுமே படத்திற்கு சென்றிருக்கிறேன். அப்போது 2010 ஆம் ஆண்டு, நான் 10ஆவது படித்துக் கொண்டிருந்தேன் என்று கூற மீனா உங்களுக்கு அப்போ 30 வயதாகிறதா என்று கேட்க, இல்ல இல்ல நான் தப்பா சொல்லிட்டேன். நான் 5ஆவது படித்துக் கொண்டிருந்தேன் என்று கூறினார்.
45
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ
இது ஒரு புறம் இருக்க அனைவரும் புத்தாடை அணிந்து தீபாவளி கொண்டாடத்திற்கு தயாராகி கொண்டிருக்கும் சூழலில் உன்னுடைய ஆதார் கார்டை எங்கு என்று சரவணன் கேட்க, எனக்கு தலைக்கு மேல் வேலைக்கு இருக்கிறது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். இதைத் தொடர்ந்து கடையிலிருந்த மாணிக்கத்திடம் மயிலுக்கு நான் சர்ப்ரைஸ் கொடுக்க ஒரு இடத்திற்கு கூட்டிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.
55
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
அதனால், அவருடைய ஆதார் கார்டு தேவைப்படுகிறது கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொண்டார். ஆதார் கார்டை பார்க்கும் போது தங்கமயில் தன்னை விட வயதில் மூத்தவர் என்று தெரிந்து சரவணன் அதிர்ச்சி அடைகிறார். அதன் பிறகு என்ன நடக்கும் என்று இந்த வாரம் ஒளிபரப்பு செய்யப்படும் எபிசோடுகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.