எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனின் ஆட்கள் சக்தியை தீர்த்துக்கட்ட சுத்துப்போட்ட நிலையில், ஜனனி அவரிடம் கண்ணீர்விட்டு கதறி உள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் - பார்கவி இருவரும் ஹனிமூன் செல்ல பெங்களூரு கிளம்பியபோது குறுக்கே வந்து சண்டை இழுத்து அந்த பிளானை சொதப்பிவிட்டார் அன்புக்கரசி. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் முதலிரவை நடத்திவிடலாம் என பிளான் போட்டு அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் நந்தினி, ரேணுகா, ஜனனி ஆகியோர் செய்கிறார்கள். அதையும் தடுக்க அன்புக்கரசி, தான் தர்ஷன் உடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை அனுப்பிவிடுகிறார். இதை தர்ஷன் - பார்கவி இருவரும் பார்க்கிறார்கள். இதன்பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
அன்புக்கரசியின் சூழ்ச்சி
அன்புக்கரசி அனுப்பிய புகைப்படங்களை பார்த்து தர்ஷன் அப்செட் ஆகி ரூமில் இருந்து வெளியே வந்து அவரிடம் சண்டை போட முயல்கிறார். அப்போது தர்ஷனை தடுத்து நிறுத்தும் ஜனனி, வீட்டில் இருப்பவர்கள் சப்போர்ட் இல்லாமல் அந்தப் பெண் இப்படி செய்யாது. இப்போ இத வச்சு அவகிட்ட போய் சண்டைபோட்டா, அவங்க இதை வச்சு, வேற ரூட் எடுப்பாங்க. அதனால் நீங்க இதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம் என புத்திமதி சொல்லி தர்ஷன் - பார்கவியை ரூமுக்குள் செல்லச் சொல்கிறார். ரூமுக்குள் சென்றதும், தர்ஷனிடம் பேசும் பார்கவி. அந்த அன்புக்கரசி தான் வேண்டுமென்றே டிராமா பண்ணிட்டு இருக்கா... எனக்கு எல்லாம் புரியுது என சொல்லி தர்ஷனை சமாதானப்படுத்துகிறார்.
34
ஆர்டர் போட்ட ஆதி குணசேகரன்
மறுபுறம் இராமேஸ்வரத்தில் ஆதி குணசேகரன் பற்றிய ரகசியங்களை தெரிந்துகொள்ள சென்றிருக்கும் சக்தி, தேவகியை நெருங்கிய நிலையில், இந்த தகவல் ஆதி குணசேகரனுக்கு கிடைக்கிறது. அவர் சக்தியை தீர்த்துக்கட்ட சொல்லி உத்தரவிடுகிறார். இதையடுத்து ஆதி குணசேகரன் அனுப்பிய ஆட்கள் இராமேஸ்வரத்தில் சக்தியை சுத்துப் போட்டுவிடுகிறார்கள். அப்போது தன்னுடைய தம்பிகளான கதிர் மற்றும் ஞானத்திடம், அந்த பைய சக்திக்கு நேரம் நெருங்கிடுச்சு என சொல்கிறார். இத்தனை நாட்களாக கோவிலில் இருந்தவர் தற்போது தம்பிகளுடன் மீண்டும் வீட்டுக்கு வருகிறார்.
வீட்டுக்குள் வந்ததும், ஜனனியை அழைத்து, உன் புருஷனை மரியாதையா இராமேஸ்வரத்தில் இருந்து மூட்டைய கட்டிட்டு வரச் சொல்லு, இல்லேனா உன் புருஷன் வீடு வந்து சேர மாட்டான் என குணசேகரன் மிரட்ட, பயத்தில் சக்திக்கு போன் போடுகிறார் ஜனனி, அப்போது சக்தி ஆபத்தில் இருப்பது ஜனனிக்கு தெரியவருகிறது. பின்னர் உள்ளே சென்று ஆதி குணசேகரனிடம், இன்னும் எத்தனை பேரோட வாழ்க்கையை நாசம் பண்ணுவீங்க, இன்னும் எத்தனைபேரை கொலை பண்ணுவீங்க என கண்ணீர்விட்டு ஜனனி கேட்க, அவரை கீழே தள்ளிவிட்டு மாடிக்கு செல்லும் குணசேகரன், அந்த பயலுக்கு எதுவும் ஆகிடக் கூடாதுனு நல்லா வேண்டிக்கோ என சொல்கிறார். இதையடுத்து என்ன ஆனது? சக்தி தப்பித்தாரா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.