விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தான் கல்யாணி என்கிற உண்மை மீனாவுக்கு தெரியவருகிறது. அதன்பின் என்ன ஆனது என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா, ரோகிணி, ஸ்ருதி, விஜயா ஆகியோர் வீட்டில் இல்லாததால், முத்து, மனோஜ், ரவி, அண்ணாமலை ஆகியோர் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டு வேலைகளை செய்த பின்னர், இரவில் மாடியில் முத்து, மனோஜ், ரவி ஆகியோர் சரக்கடித்துக் கொண்டிருக்க, அப்போது அங்கு வரும் அண்ணாமலை அவர்களுடன் சேர்ந்து ஐக்கியமாகிறார். இதையடுத்து நால்வரும் மாடியில் ஒன்றாக படுத்துக் கொண்டு பாடல் பாடி மகிழ்கிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
24
கிரிஷை பார்க்க வரும் தம்பதி
ரோகிணியின் முதல் கணவர் சேகரின் அண்ணன் சென்னைக்கு வந்திருக்கும் நிலையில், அவர் ரோகிணியின் அம்மா லட்சுமிக்கு போன் போட்டு பேசுகிறார். தன் மனைவிக்கு செக் அப் முடிந்துவிட்டதாகவும், ஒரு மாதத்திற்கு பின் மருத்துவர்கள் வரச் சொல்லி இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார். நாளை ஒரு நாள் சென்னையில் தான் இருப்போம், அதனால் கிரிஷை பார்க்க வருவதாக சொல்கிறார். அவர்கள் கெஞ்சிக் கேட்டதால், ரோகிணிக்கு தெரியாமல் கோவிலில் வைத்து கிரிஷை அவர்களுக்கு காட்ட முடிவு செய்கிறார் லட்சுமி. அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்து கிரிஷை பார்க்க வருகிறார்கள்.
34
முத்துவின் காரில் கிரிஷை பார்க்க செல்லும் ஜோடி
அதுவும் அவர்கள் முத்துவின் காரில் கிரிஷை பார்க்க வருகிறார்கள். அப்போது சென்னையில் எங்க போகணும்னாலும் சொல்லுங்க நான் சுத்திக் காட்டுறேன். புது ஊருக்கு வந்து 4 இடங்களை பார்த்தாலே மனசுல இருக்குற கவலையெல்லாம் குறைந்துவிடும் என முத்து சொல்ல, அதற்கு அவர்கள் எங்க வாழ்க்கையிலும் நாங்கள் ஒரு பாவத்தை செய்துவிட்டோம். அதனால் தான் எங்களுக்கு குழந்தையே இல்லை என சொல்கிறார். உடனே முத்து, நீங்க யாரையாவது தத்தெடுத்து கூட வளர்க்கலாமே சார் என சொல்ல, அதற்கு அவர்கள், என் தம்பி பையன் இருக்கான் என பேசிக்கொண்டே வருகிறார்கள்.
இதையடுத்து தீபாவளி கொண்டாட முத்து, மீனா, ரோகிணி, மனோஜ் என அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் அண்ணாமலையின் அம்மா ஊருக்கு செல்கிறார்கள். அப்போது அந்த ஊர் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று தன் தந்தைக்கு திதி கொடுக்க செல்கிறார் ரோகிணி. அந்த கோவிலுக்கு மீனாவும் வர, அங்கு கிரிஷ், லட்சுமி ஆகியோருடன் ரோகிணி அமர்ந்திருப்பதை பார்த்துவிடுகிறார். அப்போது லட்சுமி, ஐயரிடம், என்னோட ஒரே பொண்ணு கல்யாணி இவதான் என்று சொல்ல, அதைக்கேட்டு மீனா ஷாக் ஆகிறார். பின்னர் ரோகிணியை தனியே அழைத்து சென்று இத்தனை நாள் எங்களையெல்லாம் ஏமாத்துனியா என பளார் என ஒரு அறைவிடுகிறார். இதனால் இனி வரும் எபிசோடுகளில் தரமான சம்பவம் காத்திருக்கிறது.