கமலஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'விக்ரம்'. இதுவரை திரையில் கூறப்படாத கதையை, அனைத்து ரசிகர்களுக்கும் எளிதில் புரியும் விதத்தில் மாஸ் காட்சிகளுடன் இயக்கி இருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் உலகநாயகன் நடித்தது மட்டும் இன்றி, இப்படத்தை தயாரித்தும் இருந்தார்.
சுமார் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், 450 கோடி வசூல் சாதனை படைத்தது. இன்றைய கால கட்டத்தில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 2 வாரம் தாக்கு பிடிப்பதே குதிரை கொம்பாக இருக்கும் நிலையி, 50 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது 'விக்ரம்'. அதே போல் கமல்ஹாசன் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்த நிலையில், இப்படம் அவருக்கு ஜாக்பாட்டாக அமைந்தது.
55 வயது தமிழ் நடிகையுடன் காதலா? முதல் முறையாக மௌனம் கலைத்த தெலுங்கு பிரபாஸ் ஸ்ரீனு!
இதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் கமலஹாசன், சில படங்களை தயாரிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். அதன்படி சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தையும், சிம்பு நடிக்கும் மற்றொரு படத்தையும் தயாரிக்கிறார்.
ஒரு பக்கம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பணிகள், மற்றும் வேட்பாளர் சேர்க்கை தீவிரமாக நடந்து வரும் நிலையில், மற்றொருபுறம் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் 233-ஆவது படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் இப்படம் குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவலில், இந்த படத்தில் 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக மாஸ் நடிப்பை வெளிப்படுத்திய விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சு வார்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.