தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, இன்று தன்னுடைய திறமையான நடிப்பால், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என பன்மொழி படங்களில்... வெரைட்டியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து வேற லெவல் பர்ஃபாம்மென்ஸால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளவர் விஜய் சேதுபதி. இவரை தொடர்ந்து இவரின் மகனும் ஹீரோ லுக்கிற்கு மாறி உள்ளதால், விரைவில் இவர் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நானும் ரவுடிதான், சிந்துபாத், உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதியுடன் அவரது மகன் திரையில் தோன்றிய நிலையில்... வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்திலும், மலைவாழ் மக்களில் ஒருவராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாவது பாகத்தில் இவருக்கான காட்சிகள் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் கூட சூர்யாசேதுபத்தில் விடுதலை ஷூட்டிங் ஸ்பாட்டில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலானது.
55 வயது தமிழ் நடிகையுடன் காதலா? முதல் முறையாக மௌனம் கலைத்த தெலுங்கு பிரபாஸ் ஸ்ரீனு!
மேலும் ஹீரோவாக மாற எடுக்க வேண்டிய பயிற்சிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். ஏற்கனவே களரி, சண்டை பயிற்சி, டான்ஸ் போன்றவற்றில் சூர்யா சேதுபதி பயிற்சி செய்துள்ள இவர், விரைவில் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.