தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நடிகராக அறிமுகமான விஜய் சேதுபதி, அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதேபோல் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று முரண்டுபிடிக்காமல், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.