Vijay Sethupathi Reel Daughter Saachana Buys a New Car: பிக்பாஸ் போட்டியாளரும், நடிகையுமான சாச்சனா தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ள நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'மகாராஜா' படத்தின் மூலம் பிரபலமானவர் சாச்சனா. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றி சாச்சனாவுக்கு திரையுலகில் மிகப்பிரிய திருப்பு முனையை ஏற்படுத்தி தந்தது. குறிப்பாக உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்திய குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்டார். இவர் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்தது.
26
மதராஸி திரைப்படம்:
இதை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மதராஸி' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும், திரைப்பட உலகில் அவரை தனித்த அடையாளத்துடன் நிலைநிறுத்தின. எனவே தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து வருகிறது.
36
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்:
சாச்சனா, 'மகாராஜா' படத்தின் வெற்றியை தொடர்ந்து... விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். இவருக்கு மட்டுமே விஜய் சேதுபதி, நீ மட்டும் என்னை அப்பா என்றும் கூப்பிடலாம், சார் என்றும் கூப்பிடலாம் என சலுகை கொடுத்தார். ஆனால் அவர் கொடுத்த உரிமையை அட்வாண்டேஜாக எடுத்து கொள்ளாமல் சாச்சனா இந்த நிகழ்ச்சி முழுவதுமே, அவரை சார் என்றே அழைத்தார்.
46
24 மணிநேரத்தில் வெளியேற்றம்:
அதே போல், உள்ளே வந்த 24 மணிநேரத்தில் சாச்சனா சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு வெளியேறிய நிலையில், பின்னர் ஒரு வாரம் கழித்து மீண்டும் உள்ளே வைல்டு கார்ட் என்ட்ரி கொடுத்து 60 நாட்களுக்கு விளையாடினார். அவரது புத்திசாலித்தனம், தன்னம்பிக்கை, போன்றவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
56
சாச்சனா கூறிய ஹாப்பி நியூஸ்:
பிக்பாஸ் முடிந்த பின், சினிமாவில் அவரின் திரைப் பயணம் தொடர்ந்தது. சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார் . குறிப்பாக Instagram-ல் அவர் பகிரும் புகைப்படங்கள், வீடியோக்கள், ரீல்ஸ் ஆகியவை தொடர்ந்து வைரலாகி, அவரின் ஃபாலோவர்ஸ் மேலும் அதிகரித்துள்ளனர். இந்த நிலையில் தான் சாச்சனா மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம் ஒன்றை, புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.
66
புதிய கார் வாங்கிய சாச்சனா:
அதாவது தனது குடும்பத்துடன் சேர்ந்து போய் புதிய NEXA ரக புதிய கார் ஒன்றை அவர் வாங்கி உள்ளதாக கூறியுள்ளார். இந்த கார் 12 முதல் 14 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. காரை ஷோரூமில் குடும்பத்துடன் வாங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் சில வீடியோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்களும் சாச்சனாவுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். புதிய கார் வாங்கவேண்டும் என manifesting செய்து வந்தனாகவும், இது தன்னுடைய வாழ்வில் மிக முக்கிய தருணம்” சாச்சனா குறிப்பிட்டுள்ளார்.