சுந்தர் சி-க்கு பதில் இவரா? தலைவர் 173 திரைப்படத்தை இயக்கும் பிரபல மாஸ் ஹீரோ..!

Published : Nov 17, 2025, 04:05 PM IST

சுந்தர் சி-யின் திடீர் விலகலால், கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தலைவர் 173 படத்தை யார் இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

PREV
14
Who Replace Sundar C in Thalaivar 173

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கமல்ஹாசனின் 'ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' தயாரிப்பில் உருவாகும் 'தலைவர் 173' படத்தில் எதிர்பாராத பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னதாக இப்படத்தை இயக்குவதாக இருந்த சுந்தர் சி, இப்படத்தில் இருந்து விலகியுள்ளார். இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரம்மாண்ட படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அதுபற்றிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.

24
சுந்தர் சி அவுட்... தனுஷ் இன்?

சுந்தர் சி-யின் திடீர் விலகலால், இப்படத்தின் இயக்குனர் இடம் காலியாகியுள்ளது. 'ஜெயிலர் 2' படத்திற்குப் பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், தற்போது திரையுலகில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரை படத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'தலைவர் 173' படத்தை இயக்க தனுஷுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் மற்றும் தனுஷின் இந்த புதிய கூட்டணி தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

34
இணையுமா ரஜினி - தனுஷ் கூட்டணி?

இருப்பினும், இந்த தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தயாரிப்பு நிறுவனமோ அல்லது சம்பந்தப்பட்ட நடிகர்களோ இதுகுறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, 'தலைவர் 173' படத்தின் இயக்குனர் மாற்றம் மற்றும் எதிர்காலம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக திரையுலகம் காத்திருக்கிறது.

44
தனுஷ் பிசி

இதற்கிடையில், தனுஷ் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மே' என்ற காதல் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக தயாராகி வருகிறார். இப்படம் நவம்பர் 28 அன்று இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இதுதவிர வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என செம பிசியாக இருக்கும் தனுஷ், தலைவர் 173 பட வாய்ப்பை தட்டிதூக்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories