KPY Dheena Welcomes Baby Girl: விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காமெடியனாக பிரபலமான தீனா, தனக்கு குழந்தை பிறந்த தகவலை அறிவித்துள்ளார்.
விஜய் டிவி பல திறமையாளர்களை, வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் தங்கள் கலை, நகைச்சுவை, நடிப்பு போன்ற திறமைகளை வெளிக்காட்டி தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் தீனா.
26
தீனாவின் ஆரம்பகட்ட பயணம்:
தீனா முதன்முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில், உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அந்நிகழ்ச்சியின் பின்னணி வேலைகளில் இருந்து, போட்டியாளராக மேடையில் கால் பதித்ததுதான் அவரது பயணத்தில் பெரிய திருப்பமாக அமைந்தது. மேடையில் அவர் வெளிப்படுத்திய நகைச்சுவை டைமிங், ரைமிங் கவுண்டர்கள், லைவ் ரியாக்ஷன்கள் போன்ற அனைத்தும் அவரை அடுத்தடுத்த கட்டத்திற்கு கடத்தி சென்றது.
36
தீனாவின் சிறப்புக்கள்:
தனது பாணியில் உடனடி கவுண்டர்கள், பேச்சு வேகம், தொலைபேசி நகைச்சுவை ஆகியவை தீனாவுக்கு தனித்தன்மையை கொடுத்தன. இதன் காரணமாக அவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி அழைக்கப்பட்டார். நகைச்சுவைத் திறனை மிக எளிதாக வெளிப்படுத்தும் திறன் அவருக்கு பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியது.
46
முன்னணி நடிகர்கள் படத்தில் தீனா:
சின்னத்திரை வாய்ப்புகளை அடுத்து தீனாவுக்கு வெள்ளித்திரை கதவுகளும் திறந்தன. கார்த்தி நடித்த கைதி, தனுஷுடன் பவர் பாண்டி, தளபதி விஜய்யுடன் மாஸ்டர் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அவர் சினிமாவிலும் தன்னுடைய நிலையை வலிமை படுத்தினார். தீனாவின் கதாபாத்திரங்கள் பொதுவாக நகைச்சுவையுடன் கூடிய, அதே நேரத்தில் மனதில் பதியும் வகையில் இருந்தன.
56
தீனா - பிரகதி திருமணம்:
தனது தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்ட தீனா, 2023 ஆம் ஆண்டு பிரகதி என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் புதிய அத்தியாயத்தை தொடங்கினார். இந்த ஆண்டு தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதை சமூக வலைத்தளம் வழியாக அறிவித்தார் தீனா. ரசிகர்களும், சக கலைஞர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர்.
66
தீனாவுக்கு பெண் குழந்தை:
இதைத்தொடர்ந்து, தீனா தனக்கு குழந்தை பிறந்த தகவலை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். மேலும் தனக்கு அழகான பெண் குழந்தை பிறந்ததை அவர் பெருமிதத்துடன் கூறியது மட்டும் இன்றி.... தன்னுடைய மகளை கையில் தழுவிய தருணத்தை, உணர்ச்சிபூர்வமான வீடியோவாக பதிவு செய்து அதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ ரசிகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்று வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது.