சன் டிவியில் வெற்றிநடைபோட்டு வரும் சீரியலில் இருந்து ஹீரோ திடீரென விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு பதில் வேறு யார் நடிக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், காலை முதல் இரவு வரை தொடர்ந்து சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். முன்பெல்லாம் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் தற்போது வாரத்தின் ஏழு நாளும் ஒளிபரப்பு செய்யும் அளவுக்கு அதற்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து அதன் ஹீரோ விலகி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.
24
சீரியலில் இருந்து விலகிய ஹீரோ
சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் புனிதா. இந்த சீரியல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் தொடங்கப்பட்டது. இந்த சீரியல் தற்போது 325 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. அம்மா - மகள் பாசத்தை மையமாக வைத்து புனிதா சீரியல் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த சீரியலில் நாயகனாக கார்த்திக் வாசு நடித்து வந்தார். தற்போது அவர் தான் புனிதா சீரியலை விட்டு விலகி இருக்கிறார்.
34
அவருக்கு பதில் இவரா?
கார்த்திக் வாசு திடீரென புனிதா சீரியலை விட்டு விலகியதால் அவருக்கு பதில் வேறு ஒருவரை ஹீரோவாக களமிறக்கி உள்ளனர். அதன்படி கார்த்திக் வாசுவுக்கு பதிலாக சுரேந்தர், புனிதா சீரியலில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி உள்ளார். சீரியலின் ஹீரோ மாற்றப்பட்டுள்ளதாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கார்த்திக் வாசுவின் இடத்தை பிடித்துள்ள சுரேந்தர் ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
புனிதா சீரியலில் நிமிஷ்கா நாயகியாக நடித்து வருகிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே என்கிற சூப்பர் ஹிட் சீரியலில் நாயகியாக நடித்தவர். கண்ணான கண்ணே சீரியல் அளவுக்கு அவருக்கு புனிதா சீரியல் கைகொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம் டைமிங் தான். நேரத்தை மாற்றினால் புனிதா சீரியலும் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.