எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் செய்த சதி வேலையால், தர்ஷனும் பார்கவியும் பிரியும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் என்ன ஆனது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை ராமசாமி மெய்யப்பன் கடத்தி வைத்திருக்கும் நிலையில், அவனை விடுவிக்க வேண்டும் என்றால் தன்னைப்பற்றிய ஆதாரங்கள் அனைத்தையும் கொடுத்துவிடு என ஆதி குணசேகரன் ஜனனியை மிரட்டியதால், அவர் சம்பந்தமான வீடியோவை வாங்க வெளியே கிளம்பி செல்லும் ஜனனி, போகும் முன், தான் வரும் வரை நீங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என நந்தினி, ரேணுகா, தர்ஷினி ஆகியோரிடம் சத்தியம் வாங்குகிறார். இதனால் ஆதி குணசேகரனின் ஆட்டத்தை சகித்துக் கொண்டு இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
ஆதி குணசேகரனின் மாஸ்டர் பிளான்
ஆதி குணசேகரன், வீட்டில் உள்ள பெண்களிடம் தர்ஷனுக்கும் பார்கவிக்கும் கல்யாணம் நடந்ததற்கான ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கையில், தன்னிடம் போட்டோ இருப்பதாக கூறி போனை பார்க்கும் தர்ஷினிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதில் இருந்த போட்டோக்கள் அனைத்தும் டெலிட் ஆகி இருப்பதாக சொல்கிறார். இதையடுத்து கதிரிடம் சொல்லி, தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் திருமணம் ஆனதற்கான ஆதாரத்தை அனுப்ப சொல்கிறார் குணசேகரன். அதைப் பார்த்து பதறிப்போகும் தர்ஷினி, அதை தர்ஷன், நந்தினி, ரேணுகா ஆகியோரிடமும் காட்டுகிறார். அவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
34
உரிமை கொண்டாடும் அன்புக்கரசி
தர்ஷன் - அன்புக்கரசிக்கு திருமணம் ஆனதாக சட்டப்படி பதிவு செய்திருக்கிறார் ஆதி குணசேகரன். பார்கவிக்கும் தர்ஷனுக்கும் நடந்த திருமணம் பதிவு செய்யப்படாததால் அது செல்லாத திருமணம் ஆகிப்போய் உள்ளது. இதையடுத்து தர்ஷன் மீது உரிமை கொண்டாடத் தொடங்கும் அன்புக்கரசி, சட்டப்படி எனக்கும் இவருக்கும் தான கல்யாணம் ஆயிருக்கு. அப்படித்தான பதிவாகி இருக்கு என சொல்லி, தர்ஷனை தன்னுடைய ரூமுக்கு அழைத்துச் செல்லப் பார்க்கிறார். அவரை தடுத்து நிறுத்து தர்ஷினி, அது பொய்யான பதிவு, ஒழுங்கு மரியாதையா போயிரு என மிரட்டுகிறார்.
பின்னர் பார்கவியை வீட்டைவிட்டு விரட்ட முடிவெடுத்த ஆதி குணசேகரன், போலீஸுக்கு போன் போட்டு வர வைக்கிறார். அப்போது அங்கு வரும் லேடி போலீஸ், பார்கவியை வீட்டை விட்டு அனுப்புமாறு சொல்கிறார்கள். அப்போது குறுக்கே வரும் நந்தினி, தர்ஷன் பொண்டாட்டியா தான அவ இங்க இருக்கக் கூடாது, இவ என் சொந்தக்கார பொண்ணு என சொன்னதும் ஜெர்க் ஆகிறார் குணசேகரன். மறுபுறம் சக்தியை கடத்தி வைத்திருக்கும் ராமசாமி மெய்யப்பனுக்கு போன் போட்டு பேசும் ஜனனி, தான் வீடியோவை கொடுத்துவிடுவதாகவும், அவனை எதுவும் பண்ணாத ப்ளீஸ் என கெஞ்சுகிறார். இதையடுத்து என்ன நடக்கபோகிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.