பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், அவரை கிண்டலடித்து ஜிபி முத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதைப் பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர், நேற்று எலிமினேட் செய்யப்பட்டார். இந்த சீசனில் ஆரம்பம் முதலே சர்ச்சைகளில் சிக்கி வந்த திவாகர், சக போட்டியாளர்களை தரக்குறைவாக பேசி சர்ச்சைகளில் சிக்கினார். அவரின் செயல்கள் எல்லை மீறி சென்றதால் உள்ளிருக்கும் போட்டியாளர்களே கடுப்பானார்கள். கடந்த வாரம் நடைபெற்ற ராஜா, ராணி டாஸ்க் சொதப்பியதற்கும் முக்கிய காரணமாக திவாகர் இருந்தார்.
24
எலிமினேட் ஆன திவாகர்
இதையடுத்து வீக் எண்ட் எபிசோடில் வாட்டர்மிலன் ஸ்டார் திவாகரை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி, அவர் எலிமினேட் ஆனதாக அறிவித்தார். பிக் பாஸ் வரலாற்றில் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆவதை புரோமோவில் அறிவித்தது இதுவே முதல்முறை. பிக் பாஸ் வீட்டில் திவாகர் உடன் எலியும் பூனையுமாக இருந்து வந்த கானா வினோத் அவர் எலிமினேட் ஆகி வெளியே செல்லும் போது கண்ணீர்விட்டு அழுதார். அதேபோல் பார்வதியும் திவாகரை பிரிய முடியாமல் கண்ணீர் சிந்தினார்.
34
ஜிபி முத்து வெளியிட்ட வீடியோ
இதையடுத்து மேடைக்கு வந்தும் அவருக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் விஜய் சேதுபதி. தன்னுடைய ஆசை நிறைவேறிவிட்டதாக கூறிவிட்டு கிளம்பிச் சென்றார் திவாகர். இந்த நிலையில், திவாகரின் எவிக்ஷனை பார்த்து குஷியான முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான ஜிபி முத்து, அவரை விமர்சித்து வீடியோ ஒன்றை போட்டுள்ளார். அதில் தர்பூசணியை அண்ணன் விஜய் சேதுபதி இரண்டாக பிளந்துவிட்டார் என கூறியுள்ள அவர், அவரை முட்டாள் என்றும் திட்டி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய ஜிபி முத்து, என்ன ஆட்டம் ஆடுன, மக்கள் எல்லாத்தையும் பாத்துட்டு தான் இருக்காங்க. நீ ஒரு நடிப்பு அரக்கன்னு மட்டும் தான் நினைக்குற, இப்போ உன் நடிப்பெல்லாம் பிசிங்கி போச்சு. இனி அழுகுன தர்பூசணியை வச்சு, பீசு 10 ரூபானு தெருவுல கடை போட்டு வித்துகிட்டிரு. பேதில போவான். மூஞ்சு மொகறையும் பாரு. ஜிபி முத்துனா ச்சீ... ச்சீ... ச்சீனு சொன்னேல, இப்போ மக்கள் ச்சீ.... ச்சீனு உன்னை வெளியே அனுப்பிட்டாங்க போ என சரமாரியாக சாடி இருக்கிறார் ஜிபி முத்து.