ரஜினிகாந்த்-க்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியார் கோபாலி காலமானார்..!

Published : Nov 17, 2025, 03:47 PM IST

ரஜினிகாந்த், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட, திரைப்படப் பயிற்சி கல்லூரியில் படித்தபோது அங்கே அவருக்கு நடிப்பு பயிற்சி சொல்லிக் கொடுத்த வாத்தியார் கோபாலி காலமானார்.

PREV
Rajinikanth Teacher Gopali Passes Away

தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக கோலோச்சி வருபவர் ரஜினிகாந்த். இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது பாலச்சந்தர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ரஜினியை ஒரு நடிகராக மெருகேற்றிய ஒருவர் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர் தான் கோபாலி. இவர் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட, திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினிகாந்த் படித்தபோது அங்கே நடிப்பு பயிற்சி சொல்லிக் கொடுக்கின்ற வாத்தியராக பணியாற்றினார்.

ரஜினிக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த ஆசிரியரே இந்த கோபாலி தான். ரஜினிகாந்த் மீது அவருக்கு அளவில்லாத அன்பு உண்டாம். அதன் காரணமாகத்தான் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் திரைப்பட பயிற்சிக் கல்லூரிக்கு வந்த போது அவரிடம் ரஜினிகாந்தை மிகச் சிறப்பான முறையில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் கோபாலி. அதன் பின்னர் தான் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ரஜினியின் ஆசிரியர் காலமானார்

இதனால் கோபாலி மீது மிகுந்த மரியாதையும் மாறாத அன்பும் வைத்திருந்தார் ரஜினி. இந்தியன் எக்ஸ்பிரஸ், தூர்தர்ஷன் ஆகியவற்றில் திறம்பட பணியாற்றிய கோபாலி எண்ணற்ற திரைப்படங்களுக்கு விமர்சனமும் எழுதி இருக்கிறார். நேர்மையான பத்திரிகையாளராகவும், ரஜினியை போன்று பல திறமை வாய்ந்தவர்களை நடிகராக்கிய கோபாலி இன்று காலை காலமானார்.

கோபாலியின் மறைவுச் செய்தி பற்றி அறிந்த ரஜினி ரசிகர்கள், அவருக்கு சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வயது மூப்பு காரணமாக கோபாலி மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories