என்னை பலிகடா ஆக்க முயல்கிறார்கள்; பிக்பாஸ் எவிக்ஷனுக்கு பின் திவாகர் வெளியிட்ட வீடியோ!

Published : Nov 17, 2025, 04:42 PM IST

Diwakar Breaks Silence After Bigg Boss Eviction: பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வாட்டர் மிலன் திவாகர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது.

PREV
16
சர்ச்சைகள் நிறைந்த பிக்பாஸ் 9:

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பித்ததிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்த சீசனில் கடந்த சீசன்களில் இல்லாத அளவுக்கு இன்ஃபுளன்சர்களை கம்மி சம்பளத்திற்கு கொண்டு வந்தது தான் விஜய் டிவி செய்த மிகப்பெரிய தவறு என சில ரசிகர்கள் வசைபாடி வந்தனர். அதற்க்கு ஏற்றபோல போட்டியாளர்கள் எல்லாம் அடித்து கொள்வதை மட்டுமே ஒரு கண்டெண்டாக கொடுத்து வருவது நிகழ்ச்சி மீதான ஆர்வத்தையே குறைத்து விட்டது.

26
வைல்ட் கார்டு:

பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் நோக்கில், பிக்பாஸ் குழுவினர் நான்காவது வாரத்தில் 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்களை வீட்டிற்கு அனுப்பினர். இதனால் வீட்டு சூழல் மேலும் கிளர்ச்சியாகி, சிலரின் விளையாட்டு பாணியும் மாறியது. ஆனால், ஒருபுறம் வைல்ட் கார்டின் வரவு சலசலப்பை உருவாக்கினாலும், மறுபுறம் வீட்டில் தினசரி குழப்பம் குறையாமல் மேலும் அதிகரித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

36
புதுமையான டாஸ்க்:

டாஸ்க்கிலும் வித்தியாசம் காட்டி வரும் பிக்பாஸ் ‘தர்பீஸ் ராஜ்ஜியம்’ முதல் ‘கானா ராஜ்ஜியம்’ வரை புதுமையான ராஜா–ராணி டாஸ்குகளை கொண்டு வந்தார். இந்த கான்செப்டுகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருந்தாலும், பெரியளவில் பார்வையாளர்களை கவரவில்லை என்பே உண்மை. பிக்பாஸ் தரப்பில் புதிய ஐடியாக்கள் முயற்சிக்கப்பட்டாலும், எதிர்பார்த்த அளவிற்கு எண்டர்டெய்ன்மென்ட் கொடுக்க கூடிய ஈடுபாடு கொண்ட போட்டியாளர்கள் அங்கு யாரும் இல்லை என்பதை இது சுட்டி காட்டும் விதத்தில் உள்ளது.

46
எவிக்ஷன்:

கடந்த வார டபுள் எவிக்‌ஷனில் பிரவீனும், துஷாரும் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர். குறிப்பாக பிரவீனின் எவிக்‌ஷன் குறித்து பலரும் அது நியாயமற்றது என்றும், அவர் திறமையாக விளையாடிய நபர் என கமெண்ட் போட்டு வந்தனர். இவர்களை தொடர்ந்து, இந்த வாரம் யாரும் எதிர்பாராத விதமாக திவாகர் வெளியேற்றப்பட்டுள்ளார். பெண்களைப் பற்றிய முறைகேடு பேச்சுகள், சாதி சார்ந்த விமர்சனம் போன்ற காரணங்களே இவர் வெளியேற காரணம் கூறப்படுகிறது.

56
திவாகர் வெளியிட்ட வீடியோ:

நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், எவிக்‌ஷனுக்குப் பிறகு தன்னுடைய முதல் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட அது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், “என்னை குறிவைத்து பொய்யான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. நான் பொதுவாக சொல்லிய சில கருத்துகள் என்மீது அவதூறாக பரப்பப்படுகின்றன. ஒருவர் சோஷியல் மீடியாவில் வளரும்போது இத்தகைய குற்றச்சாட்டுகள் வருவது சாதாரணம். இந்த பிரச்சனையில் என்னை பலிகடா ஆக்க முயற்சிப்பது சாத்தியமே இல்லை. எனக்கு மக்களிடையே ஆதரவு இருக்கிறது” என்று பேசியுள்ளார். அவரது இந்த கருத்துகள் ரசிகர்களிடையே கலவையான பதில்களை உருவாக்கியுள்ளன.

66
அதிருப்தியில் ஒரு தரப்பு ரசிகர்கள்:

திவாகர் என்ன தான் பேச தெரியாமல் பேசி... வாயை விட்டு விஜய் சேதுபதியிடம் வாரவாரம் திட்டு வாங்கி வந்தாலும், அது கியூடாகவே இருந்தது. அவரின் வெளியேற்றம் பல ரசிகர்களை திருப்தியடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories