சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற விஜய் சேதுபதி !

Published : Aug 08, 2022, 03:21 PM IST

இந்தோ - பிரஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி வென்றுள்ளார் என இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

PREV
14
 சர்வதேச திரைப்பட விழாவில்  சிறந்த நடிகருக்கான விருது பெற்ற விஜய் சேதுபதி !
Mamanithan

ஹீரோ வில்லன் குணச்சித்திர வேடம் காமியோ ரோல் என கலக்கி வரும் விஜய் சேதுபதியின் சமீபத்திய படமான மாமனிதன் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் ரீதியில் தொய்வு பெற்ற போதிலும் இன்றுவரை பாராட்டுகளை குவித்து வருகிறது மாமனிதன். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி முக்கிய வேடத்தில் தோன்றியிருந்தனர்..

24
Maamanithan

யுவன் தயாரித்திருந்த இந்த படத்தில் இளையராஜா - யுவன் இருவரும் இணைந்து இசையமைத்திருந்தனர். முன்னதாக மாமனிதன் நாயகி காயத்ரி விருதுகளைக் குவிப்பார் என பிரமோஷன் விழாக்களில் பிரபலங்கள் பலரும் பேசியிருந்தனர். அதேபோல பிரபல இயக்குனர் சங்கர் எதார்த்தமான கிளாசிக், படத்தில் விஜய் சேதுபதியின் சிறப்பான நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது என்றும் கூறியிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...'இந்தியன் 2' படத்தில் இணையும் நவரச நாயகன் கார்த்திக்

34
Maamanithan

மேலும்  ஒரு வாரத்திற்கு முன்பு டோக்கியோ திரைப்பட விருதுகள் விழாவில் இப்படம் தங்கம் வென்றது. இது சிறந்த ஆசிய திரைப்பட பிரிவில் மாமனிதன் தங்கம் என்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் புதிய தகவல் ஒன்றை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது இந்தோ - பிரஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி வென்றுள்ளார். சிறந்த படத்திற்கான விருதையும் இப்படம் பெற்றுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...ஜெயிலர் அப்டேட் கொடுத்த ரஜினி.. என்ன சொன்னார் தெரியுமா?

44
maamanithan

இந்த தகவலை தெரிவித்துள்ள சீனு ராமசாமி சிறந்த நடிகருக்கான விருதை விஜய் சேதுபதியும் சிறந்த படத்திற்கு விருதை யுவன் சங்கர் ராஜாவும் பெற்றதற்கு வாழ்த்துக்கள். இந்தோ-பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவிற்கு நன்றி என தெரிவித்துள்ளார். படம் வெளியான உடனே பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்ற இந்த படம் தற்போது மேலும் ஒரு விருதை பெற்றது குறித்து ரசிகர்கள் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு... பட்டு சேலையில் பேரழகியாய் மாறிய புன்னகை அரசி சினேகா..! சிலை போல் நின்று சிலிக்க வைத்த லேட்டஸ்ட் போட்டோஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories