Aditi Shankar : அதிதி தான் தமிழ்நாட்டின் ஆலியா பட்... ஷங்கர் மகளை புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்

Published : Aug 08, 2022, 03:10 PM IST

Viruman Press Meet : விருமன் படத்தின் பிரஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது, இதில் கார்த்தி, அதிதி ஷங்கர், இயக்குனர் முத்தையா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

PREV
16
Aditi Shankar : அதிதி தான் தமிழ்நாட்டின் ஆலியா பட்... ஷங்கர் மகளை புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்

சூர்யா தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடித்த முதல் படம் கடைக்குட்டி சிங்கம். பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தற்போது 4 ஆண்டு இடைவெளிக்கு பின், சூர்யாவும், கார்த்தியும் மீண்டும் இணைந்துள்ள படம் விருமன். கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் கில்லாடி இயக்குனரான முத்தையா தான் இப்படத்தை இயக்கி உள்ளார்.

26

சூர்யாவின் 2டி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் தேன்மொழி என்கிற கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து இருக்கிறார் அதிதி. அதுமட்டுமின்றி இப்படத்தின் மூலம் பாடகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார் அதிதி.

46

விருமன் படத்தில் இடம்பெறும் மதுர வீரன் என்கிற பாடலை, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து பாடியுள்ளார் அதிதி. இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பும் கிடைத்து வருகிறது. மேலும் இப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், வடிவுக்கரசி, சிங்கம்புலி, சூரி, ஆர்.கே.சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

56

இப்படத்தின் பிரஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நடிகரும், இயக்குனருமான சிங்கபுலி, படக்குழுவினர் ஒவ்வொருவரைப் பற்றியும் பாராட்டி பேசினார். இறுதியாக நடிகை அதிதி ஷங்கரை பற்றி பேசிய அவர், அதிதி தான் தமிழ்நாட்டின் ஆலியா பட் என புகழ்ந்தார். 

66

இதைக்கேட்டு அதிதியும் வெட்கத்தில் சிரித்தார். மேலும் ஷங்கரை பார்த்து மென்மேலும் சினிமாவில் அதிதி வளர வேண்டும் என பாராட்டி பேசி தனது உரையை முடித்துக்கொண்டார் சிங்கம்புலி.

இதையும் படியுங்கள்... ஷங்கர் மகளுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு... கார்த்தியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியானார் அதிதி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories