இதுவே பெரிய சாதனை தானே... 11 நாள் முடிவில் 'தி லெஜெண்ட்' படம் வசூல் செய்தது எத்தனை கோடி தெரியுமா?

Published : Aug 08, 2022, 02:53 PM IST

'தி லெஜெண்ட்' திரைப்படம் வெளியாகி 12 நாள் ஆகும் நிலையில், இந்த படத்தின் 11 நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
14
இதுவே பெரிய சாதனை தானே... 11 நாள் முடிவில் 'தி லெஜெண்ட்' படம் வசூல் செய்தது எத்தனை கோடி தெரியுமா?

விளம்பர படங்களில், விதவிதமான ஆட்டம் பாடத்தோடு, தலைகாட்ட துவங்கிய சரவணன் அருள், நடிகராகவும் மாறி... அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இவரது விளம்பரங்களை தொடர்ந்து இயக்கி வந்த, இரட்டை இயக்குனர்களான... ஜெடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில், இவர் நடித்த 'தி லெஜெண்ட்' திரைப்படம் ஜூலை 28 ஆம் தேதி மிகப்பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியானது. சுமார் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில், முன்னணி நடிகர்களுக்கு இணையாக பான் இந்தியா படமாக இப்படம் வெளியான நிலையில், தமிழகத்தில் மட்டும் 650 திரையரங்குகளில் வெளியானது.

24

இந்த படத்தின் மூலம் சிறந்த கருத்தை ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் சரவணன் அருள் கூறி இருந்தாலும், கதைக்களம் வீக்காக இருப்பது தான் படத்தின் பின்னடைவுக்கு காரணம் என கூறப்பட்டது. மேலும் தொடர்ந்து இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும், தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. சில முன்னணி நடிகர்கள் படங்களே, கலவையான விமர்சனங்களை பெற்றால், வந்த வேகத்தில் திரையரங்கை விட்டு சென்று விடுகிறது. ஆனால் 'தி லெஜெண்ட்' திரைப்படம் தற்போது வரை பல திரையரங்குகளில் ஓடி கொண்டிருப்பதே, மிக பெரிய சாதனை தானே என சிலர் கூறி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: ஸ்கூல் கட் அடித்து விட்டு அமீர் கானின் அந்த படத்தை பார்த்திருக்குறேன்..! மேடையில் தீவிர ரசிகராக பேசிய உதயநிதி!
 

34

அதே போல், இந்த படத்தின் 11 நாள் முடிவில்... வசூலித்துள்ள வசூல் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் மட்டுமே 'தி லெஜெண்ட்' திரைப்படம் சுமார் 11 முதல் 12 கோடி வரை வசூலித்துள்ளதாம். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
 

44

இந்த படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக, ஊர்வசி ரவுத்தலே கோலிவுட் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் யோகி பாபு, பிரபு, நாசர், கோவை சரளா ,ரோபோ சங்கர், மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக நடிகர் விவேக் நடித்த கடைசி திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. விவேக்கின் காமெடி இந்த படத்தில் தொடர்ந்து பல ரசிகர்களால் ரசிக்க பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: பட்டு சேலையில் பேரழகியாய் மாறிய புன்னகை அரசி சினேகா..! சிலை போல் நின்று சிலிக்க வைத்த லேட்டஸ்ட் போட்டோஸ்!
 

Read more Photos on
click me!

Recommended Stories