விக்ரம் படத்துக்கு பின் மெலிந்து.... ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன பகத் பாசில் - வைரலாகும் பர்த்டே போட்டோஸ்

Published : Aug 08, 2022, 02:32 PM IST

Fahadh Faasil : பகத் பாசில் இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது மனைவி நஸ்ரியா, பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

PREV
14
விக்ரம் படத்துக்கு பின் மெலிந்து.... ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன பகத் பாசில் - வைரலாகும் பர்த்டே போட்டோஸ்

தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பாசில். இவரது மகன் தான் நடிகர் பகத் பாசில். மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், கடந்த 2002-ம் ஆண்டே மலையாள படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அதன்பின் 7 ஆண்டுகள் நடிக்காமல் இருந்த அவர் கேரளா காஃபே என்கிற ஆந்தாலஜி படம் மூலம் சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

24

இதையடுத்து அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார் பகத் பாசில். இவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான தொண்டிமுதலும் திரிக்ஷக்‌ஷியும் என்கிற மலையாள படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார். 2014-ம் ஆண்டு ரிலீசான பெங்களூரு டேஸ் படத்தில் நடித்தபோது நஸ்ரியா மீது காதல் வயப்பட்ட பகத், அவரையே திருமணமும் செய்துகொண்டார்.

இதையும் படியுங்கள்... லிப்லாக் முத்த காட்சிகள் நிறைந்த டிரைலருக்கு எதிர்ப்பு... ரிலீசுக்கு முன்பே சர்ச்சையில் சிக்கிய லெஸ்பியன் படம்

34

திருமணத்துக்கு பின்னர் பிறமொழி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் பகத் பாசில். குறிப்பாக தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான வேலைக்காரன் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மிரட்டிய பகத் பாசில், இதன்பின் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படம் மூலம் தெலுங்கில் வில்லனாக எண்ட்ரி கொடுத்தார்.

44

சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்திலும் செம மாஸான ரோலில் நடித்திருந்த பகத் பாசில் இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அவரது மனைவி நஸ்ரியா, பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு காட்சியளிக்கிறார் பகத் பாசில். இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலரோ அவர் சட்டை பெரிதாக போட்டிருப்பதால், அப்படி தெரிவதாக கூறி வருகின்றனர். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... பட்டு சேலையில் பேரழகியாய் மாறிய புன்னகை அரசி சினேகா..! சிலை போல் நின்று சிலிக்க வைத்த லேட்டஸ்ட் போட்டோஸ்!

click me!

Recommended Stories