லிப்லாக் முத்த காட்சிகள் நிறைந்த டிரைலருக்கு எதிர்ப்பு... ரிலீசுக்கு முன்பே சர்ச்சையில் சிக்கிய லெஸ்பியன் படம்

First Published Aug 8, 2022, 1:45 PM IST

Holy Wound : ஸ்கூல் படிக்கும்போதே நெருங்கிய தோழிகளாக இருக்கும் இருவர் லெஸ்பியனாக மாறியதைப் பற்றி மலையாளத்தில் எடுக்கப்பட்டுள்ள படம் தான் ஹோலி ஊண்டு.

கொரோனா ஊரடங்குக்கு பின்னர் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி கண்டுவிட்டன. இதனால் புதுப் படங்களே நேரடியாக ஓடிடியில் வெளியிடப்படுவதும், ஓடிடி தளங்களுக்காகவே பிரத்யேகமாக வெப் தொடர்கள் தயாரிப்பதும் தற்போது இந்திய திரையுலகில் அதிகரித்துள்ளது. ஓடிடி தளங்களும் அதிகளவில் வரத் தொடங்கி விட்டன.

இந்திய மொழிகளிலேயே ஓடிடி தளங்களின் வளர்ச்சி அதிகம் உள்ள மாநிலம் என்றால் அது கேரளா தான். அங்கு தற்போதைய சூழலில் வாரத்திற்கு ஒன்றிரண்டு படமாவது நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி விடுகின்றன. அந்த அளவுக்கு அங்கு ஓடிடி-யின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. புதுப் புது சிந்தனையாளர்கள் நினைத்தபடி படம் எடுத்து வெளியிடவும் அது உதவியாக உள்ளது.

அந்த வகையில் புதிய கதைக்களத்துடன் மலையாளத்தில் தயாராகி உள்ள படம் தான் ஹோலி ஊண்டு (புனிதமான காயம்). அசோக் ஆர் நாத் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ள இந்த படத்தில் அம்ரிதா வினோத், ஜானகி சுதீர் ஆகியோர் லெஸ்பியன்களாக நடித்துள்ளனர். ரோனி ரபேல் இசையமைத்துள்ள இப்படத்திற்கு உன்னி மடாவூர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ந் தேதி நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளது.

இதையும், படியுங்கள்.... Exclusive : ''தமிழ்ராக்கர்ஸ்'' - அருண்விஜய் & வாணிபோஜன் சிறப்பு நேர்காணல்!

ஸ்கூல் படிக்கும்போதே நெருங்கிய தோழிகளாக இருக்கும் இருவர் லெஸ்பியனாக மாறியதைப் பற்றியது தான் இப்படம். இந்த இருவரில் ஒருவர் விருப்பமின்றி ஒருவனை திருமணம் செய்துகொள்கிறாள், அவன்மூலம் பாலியல் ரீதியாக பல துன்புறுத்தல்களையும் அனுபவிக்கிறாள். மற்றொரு தோழி, வலுக்கட்டாயமாக கன்னியாஸ்திரி ஆக்கப்படுகின்றாள்.

ஆணின் பாலியல் கொடுமையால் அவதிப்படும் ஒரு பெண்ணும், ஆண் துணையே இல்லாமல் வாழ்க்கையை வெறுப்புடன் வாழும் ஒரு பெண்ணும் சேர்ந்து தங்களது சுய இன்பத்திற்காக லெஸ்பியனாக மாறுகிறார்கள். அவர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது? அவர்களை ஏற்றுக்கொண்டதா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதையாம்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் லெஸ்பியனாக நடித்துள்ள பெண்கள் இருவரும் லிப்லாக் முத்தம் கொடுக்கும்படியான காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி அதில் ஒரு பெண்ணை கன்னியாஸ்திரியாக காட்டி உள்ளதால் இப்படத்திற்கு கிறிஸ்தவர்கள் தரப்பில் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. ஒரு பக்கம் எதிர்ப்பு இருந்தாலும் இந்த சர்ச்சை கதை எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை காண பலரும் ஆவலாக உள்ளதால், இப்படம் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதையும், படியுங்கள்.... ஸ்கூல் கட் அடித்து விட்டு அமீர் கானின் அந்த படத்தை பார்த்திருக்குறேன்..! மேடையில் தீவிர ரசிகராக பேசிய உதயநிதி!

click me!