இந்நிலையில் இன்று விமான நிலையம் வந்த ரஜினிகாந்த் இடம் செய்தியாளர்கள் அடுத்த பிராசஸ் என்ன சார் என்று கேள்வி கேட்டுள்ளன.ர் அதற்கு பதில் அளித்த ரஜினி ஸ்டைலான சிரிப்புடன் அடுத்து என்ன ஷூட்டிங் தான் எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் கைரலாகி வருகிறது.
முன்னதாக படத்தின் இயக்குனர் விருது விழா ஒன்றில் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குவதாக தெரிவித்திருந்தார். ஆக்சன் திரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில்கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிப்பதை அவரே உறுதி செய்திருந்தார். இதில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இணைய உள்ளது.
இவர்களில் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராய், முக்கிய வேடத்தில் பிரியங்கா மோகன், எதிர்நாயகனாக சிவராஜ்குமார் நடிப்பார்கள் என தகவல் பரவி வருகிறது. ரஜினிகாந்த் தற்போது டெல்லிக்கு சென்று விட்டு திரும்பியுள்ளார். அங்கு 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லிக்கு சென்ற தென்னக என்சிசி குழந்தைகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.