'இந்தியன் 2' படத்தில் இணையும் நவரச நாயகன் கார்த்திக்

Published : Aug 08, 2022, 02:34 PM IST

இந்தியன் 2 படத்தில் நவரச நாயகன் கார்த்திக் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கார்த்தி பங்கேற்பது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
14
'இந்தியன் 2' படத்தில் இணையும் நவரச நாயகன் கார்த்திக்
indian 2

பல ஆண்டு காத்திருப்பில் இருக்கிறது இந்தியன் 2. கமலஹாசன் நடிப்பில் மறைந்த நடிகர் விவேக் மற்றும் நெடுமுடி வேணு முக்கிய வேடத்தில் நடித்து வந்த  இந்த படம் கடந்த ஆண்டு 2020இல் நிறுத்தப்பட்டது. அப்போதுதுரதிஷ்டமா விபத்தின் காரணமாக சினிமா தொழிலாளர் உயிர்கிழந்ததை அடுத்து படம் பாதியில் நிறுத்தப்பட்டது.  அதன் பின்னர் இந்த படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 

24
indian 2

இந்த படத்தை மீண்டும் துவங்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.இந்தியன் 2 படம் கமலஹாசன் சங்கர் மீண்டும் இணைவதை குறிப்பிடும் திட்டமாகும். இதில் நவரச நாயகன் கார்த்திக் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கார்த்தி பங்கேற்பது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...ஜெயிலர் அப்டேட் கொடுத்த ரஜினி.. என்ன சொன்னார் தெரியுமா?

34
indian 2

இதற்கிடையே செப்டம்பர் 13ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று காஜல் அகர்வால் உறுதிப்படுத்தி உள்ளார். கமல்ஹாசன் படத்தில் இரண்டு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க உள்ளார். இதற்காக ஒரு மாத பயணமாக அமெரிக்க சென்றுள்ளார் உலக நாயகன்.

மேலும் செய்திகளுக்கு... பட்டு சேலையில் பேரழகியாய் மாறிய புன்னகை அரசி சினேகா..! சிலை போல் நின்று சிலிக்க வைத்த லேட்டஸ்ட் போட்டோஸ்!

44
indian 2

இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் உள்ள திரைப்பட நகரத்தில் நடைபெற உள்ளது. இதில் சித்தார்த், ராகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால்  மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தற்போது ஷங்கர்  ராம்சரண், மற்றும் கியாரா அத்வானி முக்கிய ரோலில் நடிக்கும் ஆர்சி 15 படத்தில் வேலைகளில் பிஸியாக உள்ளார். அதேபோல விக்ரம் படம் வெளியாகிய பிளாக் பாஸ்டர் அடித்த கொண்டாட்டத்தில் உலகநாயகன் திளைத்து வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு... அனுபவ இயக்குனர்கள் சொதப்பியதால் அப்செட் ஆன அண்ணாச்சி... அடுத்த பட வாய்ப்பு யாருக்கு கொடுக்க போகிறார் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories