உன் வன்மத்தை கக்குற இடம் இதுஇல்ல! திமிரா பேசிய அர்னவ்; திட்டி வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி

Published : Oct 21, 2024, 08:01 AM IST

Bigg Boss Arnav : பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து அர்னவ் எலிமினேட் ஆன பின்னர் மேடையில் சக போட்டியாளர்களை தரக்குறைவாக விமர்சித்ததை விஜய் சேதுபதி கண்டித்தார்.

PREV
16
உன் வன்மத்தை கக்குற இடம் இதுஇல்ல! திமிரா பேசிய அர்னவ்; திட்டி வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி
Arnav, Vijay Sethupathi

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 8வது சீசன் 15 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். முதல் நாளே எவிக்‌ஷன் என்கிற எதிர்பாரா ட்விஸ்ட் உடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி போகப்போக மந்தமாக மாறியது. முதல் நாளே எலிமினேட் ஆன சாச்சனா பின்னர் ரீ எண்ட்ரி கொடுத்தார். முதல் வார இறுதியில் ரவீந்திரன் எலிமினேட் செய்யப்பட்டார்.

26
Arnav

ரவீந்தரின் எவிக்‌ஷனுக்கு பின்னர் இரண்டாவது வாரம் நாமினேஷன் லிஸ்டில் மொத்தம் 10 போட்டியாளர்கள் இடம்பெற்று இருந்தனர். அதில் ஜாக்குலின் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் பெற்று எவிக்‌ஷனில் இருந்து தப்பினார். எஞ்சியிருந்த 9 பேரில் குறைவான வாக்குகள் அர்னவ் மற்றும் தர்ஷா குப்தாவுக்கு தான் கிடைத்திருந்தது. அதனால் அவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் எலிமினேட் ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய எபிசோடில் அர்னவ் எலிமினேட் செய்யப்பட்டார்.

36
Vijay Sethupathi

பிக்பாஸுக்கு முன்னர் சீரியலில் நடித்த போது தன்னுடைய மனைவி திவ்யா ஸ்ரீதரை அர்னவ் எட்டி உதைத்ததும். அவர் கர்ப்பிணியாக இருந்தபோதே அவரை வீட்டை விட்டு துரத்தி விட்ட சம்பவம் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டது. வெளியே இப்படி இருந்த அர்னவ், பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததும் யாரிடமும் கோபத்தை காட்டாமல் தன்னை ஒரு நல்லவனாக மக்களுக்கு காட்ட முயற்சித்து வந்தார். ஆனால் அவரின் பர்பார்மன்ஸ் எடுபடவில்லை.

46
Vijay Sethupathi Warns Arnav

இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆன அர்னவ், போகும்போது தன்னுடைய டிராபியை ஆக்ரோஷமாக உடைத்து கோபத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து மேடையில் விஜய் சேதுபதியிடம் வந்து பேசும்போது, உள்ளே இருக்கும் போட்டியாளர்களிடம் கடைசியாக ஏதேனும் சொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என விஜய் சேதுபதி சொன்னதும், அட்வைஸ் பண்ண ஆரம்பித்தார் அர்னவ். இடையே குறுக்கிட்ட விஜய் சேதுபதி ஒரு வரில டப்புனு சொல்லி முடிங்க ஏன் ஜவ்வா இழுக்குறீங்க என்று சொன்னதும் தன்னுடைய டோனை மாற்றினார் அர்னவ்.

இதையும் படியுங்கள்... உப்பு சப்பு இல்லாத பிக்பாஸ்; கொளுத்தி போட வரும் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் யார்; யார்?

56
Arnav Cheap Behaviour in Bigg Boss

உடனே கேர்ள்ஸ் டீம் நல்லா விளையாடுங்க என சொல்லிவிட்டு, ஆண்கள் அணியினரை ஜால்ராஸ் என அழைத்த அர்னவ், சத்யா, ஜெஃப்ரி, விஜே விஷால், அருண் ஆகியோரது பெயரை குறிப்பிட்டு, மேடையில் இருந்துகொண்டே போடா, வாடா என திமிராக பேசினார். இடையே குறுக்கிட்ட விஜய் சேதுபதி, உங்க வன்மத்தை கக்குற இடம் இது இல்ல, கருத்த மட்டும் சொல்லுங்க என சொன்னதோடு, இதெல்லாம் நீங்க உள்ள பேசிருக்கனும், அங்க விட்டுட்டு இங்க வந்து பேசுறது அநாகரீகம். தயவு செஞ்சு மரியாதையா பேசுங்க என்று சொன்னதோடு, மற்றவர்களை மரியாதையா நடத்துவதில் தான் நமக்கான மரியாதையும் இருக்கு என்று அட்வைஸ் பண்ணினார் விஜய் சேதுபதி.

66
Vijay Sethupathi, Arnav

பின்னர் இறுதியாக பேசிய அர்னவ், ஆண்கள் அணியினரை குரூப்பாக விளையாட வேண்டாம் என அறிவுறுத்திவிட்டு விடைபெற்றார். அப்போது அவரிடம் ஒரு உண்மையை போட்டு உடைத்த விஜய் சேதுபதி, உங்களை நாமினேட் செய்தது பெண்கள் அணியினர் தான், இவ்ளோ நாள் ஆண்கள் கூடவே இருந்துவிட்டு வெளியே வந்ததும் இப்படி அநாகரீகமாக நடந்துகொள்ள கூடாது என்று கூறி அவரை வழியணுப்பி வைத்தார் விஜய் சேதுபதி. அர்னவின் இந்த செயலுக்கு நெட்டிசன்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... எதிர்பாராத எலிமினேஷன்; பிக்பாஸ் வீட்டிற்கு இந்த வாரம் குட் பை சொன்ன போட்டியாளர் இவர் தான்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories