நவம்பர் 14ம் தேதி கங்குவா திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தொடர்ச்சியாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா ஆகிய இருவரும் இப்போதிலிருந்து ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா "கங்குவா முதல் பாதி படத்தை பார்த்துவிட்டு சூர்யா அண்ணனுக்கு போன் செய்து படத்தைப் பற்றி பேசினேன். பொதுவாக படத்தில் இருக்கும் குறைகளை தான், நான் முதலில் நாயகர்களிடம் பேசுவேன். ஆனால் கல்குவா படத்தை பார்த்துவிட்டு, நான் சூர்யா அண்ணனிடம் பேசும்பொழுது என்னால் நல்ல விஷயங்களை மட்டுமே கூற முடிந்தது. காரணம் இந்த திரைப்படத்தில் குறை என்று எதுவுமே இல்லை".
"அதை கேட்டதுமே சூர்யா அண்ணனுடன் மகிழ்ச்சி வேறொரு நிலைக்கு சென்றுவிட்டது" என்று கூறியிருக்கிறார் ஞானவேல்.
தேசிங்கு பெரியசாமி படத்தை கைவிட்டாரா சிம்பு? அடுத்த படம் குறித்து STR தந்த ஹிண்ட்!