தேசிங்கு பெரியசாமி படத்தை கைவிட்டாரா சிம்பு? அடுத்த படம் குறித்து STR தந்த ஹிண்ட்!

First Published | Oct 20, 2024, 3:32 PM IST

Simbu Next Movie : மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக தான் நடிக்க உள்ள படத்தின் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்.

Actor Simbu

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. அவர் நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். இதில் கமல்ஹாசன், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் கமல்ஹாசன் உடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளார் சிம்பு. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.

Simbu and Kamal

தக் லைஃப் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தக் லைஃப் திரைப்படத்தை தொடர் நடிகர் சிம்பு என்ன படம் நடிக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஏற்கனவே அவரின் 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதால் அப்படத்தில் தான் சிம்பு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... சிம்புவுக்காக ஆண் குரலில் ஜானகி பாடிய சூப்பர் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?

Tap to resize

Simbu Next Movie

ஆனால் அதில் புது ட்விஸ்டாக சிம்பு தன்னுடைய அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதன்படி அப்படம் தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா ஆகியவை இணைந்த படமாக ஜென் Z மோடில் இருக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார். ஜென் Z என்றால் 1995 முதல் 2010 வரை பிறந்தவர்களை தான் ஜென் Z என குறிப்பிடுவார்கள். அவர்களை கவரும் வகையில் தன்னுடைய அடுத்த படம் இருக்கும் என்று சிம்பு குறிப்பிட்டுள்ளார்.

Desingh Periyasamy, Simbu

இதன்மூலம் சிம்புவின் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கபோவதில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. ஏனெனில் அவர் சிம்புவுக்கு வரலாற்று கதை ஒன்றை சொல்லி இருந்தார். ஆனால் சிம்பு தற்போது கூறுவதை பார்த்தால் வேறு கதையாக இருக்கிறது. அதனால் தேசிங்கு பெரியசாமி படத்தை சிம்பு ஓரங்கட்டி உள்ளது இதன் மூலம் தெரிய வருகிறது. அநேகமாக சிம்புவின் அடுத்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க வாய்ப்புள்ளது. இவர் ஓ மை கடவுளே படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 31 வயது நடிகையுடன் டேட்டிங் பண்ணும் சிம்பு! காதலுக்கு கிரீன் சிக்னல்.. விரைவில் திருமணம்!

Latest Videos

click me!