விஜய், அஜித், ரஜினிக்கு எட்டாக்கனியாக இருக்கும் தேசிய விருதை அதிக முறை வென்ற நடிகர் யார் தெரியுமா?

First Published | Oct 20, 2024, 1:43 PM IST

National Award winning Tamil Actors : தமிழ் சினிமா வரலாற்றில் அதிக தேசிய விருதுகளை வென்ற தமிழ் நடிகர் யார் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Most National Award winning Tamil Actors

இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது தேசிய விருது. ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இவ்விருது விழாவில் பல்வேறு திரையுலகில் இருந்து சிறந்த படங்களை தேர்வு செய்வது மட்டுமின்றி, சிறந்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை அதிக தேசிய விருதுகளை வென்ற நடிகர்கள் யார்... யார் என்பதை பார்க்கலாம்.

kamalhaasan

தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த நடிகருக்காக தேசிய விருதை அதிக முறை வாங்கியது உலகநாயகன் கமல்ஹாசன் தான். சிறுவயதில் இருந்தே சினிமாவுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கமல்ஹாசன் இதுவரை மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்று இருக்கிறார். மூன்றாம் பிறை படத்துக்காக தான் கமல்ஹாசன் முதன்முதலில் தேசிய விருதை வாங்கினார். அதன் பின்னர் மணிரத்னம் இயக்கிய நாயகன் மற்றும் ஷங்கர் இயக்கிய இந்தியன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதினை பெற்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தார் கமல்.

இதையும் படியுங்கள்... ஒரே ஒரு ஓட்டில் ஏ.ஆர்.ரகுமானிடம் தேசிய விருதை பறிகொடுத்த இளையராஜா!!

Latest Videos


Suriya

கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அதிக முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கிய நடிகர் என்றால் அது தனுஷ் தான். வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய படங்களுக்காக தனுஷ் தேசிய விருதை வென்றார். இதுதவிர புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், சீயான் விக்ரம், நடிப்பின் நாயகன் சூர்யா, மாஸ் வில்லன் பிரகாஷ் ராஜ் ஆகியோர் தலா ஒரு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளனர்.

Dhanush

கடந்த 1971-ம் ஆண்டு வெளியான ரிக்‌ஷாக்காரன் படத்துக்காக எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இதேபோல் பாலா இயக்கிய பிதாமகன் படத்துக்காக விக்ரமிற்கும், காஞ்சிவரம் படத்துக்காக பிரகாஷ் ராஜுக்கும், கடந்த 2020ம் ஆண்டு வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவிற்கும் தேசிய விருது வழங்கப்பட்டது.

sivaji ganesan

இதில் வியத்தகு தகவல் என்னவென்றால் கோலிவுட்டின் ஜாம்பவான் நடிகர்களாக கருதப்படும் சிவாஜி கணேசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் இதுவரை ஒரு முறை கூட தேசிய விருதை வென்றதில்லை. இதில் சிவாஜிக்கு தேவர்மகன் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை சிவாஜி வாங்க மறுத்துவிட்டார்.

Ajith Vijay and Rajinikanth

அதேபோல் தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோக்களாக வலம் வரும் விஜய், அஜித் ஆகியோருக்கும் தேசிய விருது என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. கோலிவுட்டோடு ஒப்பிடுகையில் டோலிவுட்டில் இதுவரை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றது ஒரே ஒரு நடிகர் தான். அவர் வேறுயாருமில்லை நடிகர் அல்லு அர்ஜுன் தான். கடந்த 2023ம் ஆண்டு புஷ்பா படத்திற்காக அவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... தேசிய விருது அறிவிக்கப்பட்டும் வாங்க மறுத்த சிவாஜி கணேசன் - காரணம் என்ன?

click me!