உப்பு சப்பு இல்லாத பிக்பாஸ்; கொளுத்தி போட வரும் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் யார்; யார்?

Bigg Boss tamil season 8 Wild Card Entry : பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வருகிற தீபாவளி பண்டிகையை ஒட்டி 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Bigg Boss Vijay Sethupathi

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்ததால் அவரை விஜய் சேதுபதி மிஞ்சுவாரா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் முதல் வாரத்திலேயே தன்னுடைய தக் லைஃப் பதில்களால் ரசிகர்களை கவர்ந்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

Bigg Boss Tamil season 8 contestants

அதன் வெளிப்பாடாக பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் கடந்த அக்டோபர் 6-ந் தேதி 5 மணிநேரம் ஒளிபரப்பான பிக்பாஸ் லாஞ்ச் எபிசோடுக்கு 9 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருந்தன. இப்படி ஆரவாரமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கினாலும் முதல் இரு வாரம் மந்த நிலையிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சி பயணித்துக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் முழுக்க எந்த சுவாரஸ்ய நிகழ்வும் இல்லாததால் வெள்ளிக்கிழமை சாச்சனா - அன்ஷிதா இடையே நடந்த சண்டையை வைத்து ஒரு எபிசோடை ஓட்டினார் விஜய் சேதுபதி.

இதையும் படியுங்கள்... எதிர்பாராத எலிமினேஷன்; பிக்பாஸ் வீட்டிற்கு இந்த வாரம் குட் பை சொன்ன போட்டியாளர் இவர் தான்!


Bigg Boss Wild Card Entry

வழக்கமாக நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் குறைந்தால் பிக்பாஸ் கையாளும் ஒரு யுக்தி தான் வைல்டு கார்டு எண்ட்ரி. அந்த வகையில் இந்த சீசனில் இதுவரை ரவீந்தர், அர்னவ் ஆகிய இருவர் எலிமினேட் ஆகி உள்ள நிலையில், தற்போது தீபாவளி ஸ்பெஷலாக 5 வைல்டு கார்டு போட்டியாளர்களை களமிறக்க முடிவு செய்துள்ளாராம் பிக்பாஸ். கடந்த சீசனில் இதேபோல் ஒட்டுமொத்தமாக ஐந்து போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டதில் அதில் இருந்து ஒருவரான அர்ச்சனா தான் டைட்டில் ஜெயித்தார்.

Divya Sridhar, Aishwarya Bhaskaran

அப்படி இந்த சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக களமிறங்க உள்ள அந்த போட்டியாளர்கள் யார் யார் என்கிற விவரம் லீக் ஆகி உள்ளது. அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பான செவ்வந்தி சீரியலில் நாயகியாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆன திவ்யா ஸ்ரீதர் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுக்க உள்ளாராம். இவர் இந்த வாரம் எலிமினேட் ஆன அர்னவ்வின் மனைவி ஆவார். இவர்கள் இருவரும் சண்டை போட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

Vinoth Babu, TSK

இந்த சீசனில் இதுவரை 13 விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், வைல்டு கார்டு எண்ட்ரியிலும் இரண்டு விஜய் டிவி பிரபலங்கள் உள்ளனர். அதில் ஒன்று மிமிக்ரி ஆர்டிஸ்டும் நடிகருமான டிஎஸ்கே, மற்றொருவர் வினோத் பாபு, இவர் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நாயகனாக நடித்திருந்தார். இதுதவிர சூர்யாவின் ஆறு திரைப்படத்தில் சவுண்டு சரோஜாவாக நடித்த ஐஸ்வர்யா பாஸ்கரனும் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுக்க உள்ளாராம். எஞ்சியுள்ள ஒரு போட்டியாளரை மட்டும் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்...  மக்கள் செல்வனுக்கு மவுசு இல்லையா! அதளபாதாளத்துக்கு சென்ற பிக்பாஸ் டிஆர்பி; சீரியலை விட கம்மியாம்

Latest Videos

click me!