October 25 OTT Release Movies : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் திரைப்படம் உள்பட அக்டோபர் 24-ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
திரையரங்குகளில் படங்கள் வார வாரம் ரிலீஸ் ஆவதை போல், ஓடிடி தளங்களிலும் புதுப்படங்கள் வார வாரம் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக தியேட்டரில் ரிலீஸ் ஆன 28 நாட்களில் படங்களை ஓடிடியில் வெளியிடலாம். அந்த வகையில் வருகிற அக்டோபர் 25-ந் தேதி தமிழில் நான்கு தரமான படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள், எந்தெந்த ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆக உள்ளன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
25
Meiyazhagan
மெய்யழகன்
நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் திரைக்கு வந்த படம் மெய்யழகன். இப்படத்தை பிரேம் குமார் இயக்கி இருந்தார். இதற்கு முன்னதாக 96 எனும் மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்த பிரேம்குமார் தமிழில் இயக்கிய இரண்டாவது படம் இதுவாகும். இப்படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்து இருந்தார். இப்படம் வருகிற அக்டோபர் 25-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
35
Kadaisi Ulaga Por
கடைசி உலகப் போர்
மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக மட்டுமின்றி இயக்குனராகவும் அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி இருந்தார். அந்த வகையில் அவர் இயக்கத்தில் கடந்த மாதம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற படம் கடைசி உலகப் போர். இப்படத்தில் அவரே ஹீரோவாக நடித்திருந்தது மட்டுமின்றி இசையமைத்தும் இருந்தார். இப்படம் வருகிற அக்டோபர் 25-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, மாமனிதன் போன்ற மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்தவர் சீனு ராமசாமி. அவர் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 20ந் தேதி திரைக்கு வந்த படம் தான் கோழிப்பண்ணை செல்லதுரை. இப்படத்தில் யோகிபாபு, பிரிகிடா, ஏகன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தியேட்டரில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத இப்படம் வருகிற அக்டோபர் 24-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
55
Aindham vedham
ஐந்தாம் வேதம்
மர்ம தேசம் இயக்குனர் நாகா இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர் தான் ஐந்தாம் வேதம். இதில் நடிகை சாய் தன்ஷிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். புராணத் தொடரான இதில் சந்தோஷ் பிரதாப், தேவதர்ஷினி, பொன்வண்ணன், மேத்யூ வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த வெப் தொடர், வருகிற அக்டோபர் 25-ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.