முறைமாமன் திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் வெளியான "முறை மாப்பிள்ளை", "உள்ளத்தை அள்ளித்தா", "மேட்டுக்குடி", "அருணாச்சலம்" மற்றும் "நாம் இருவர் நமக்கு இருவர்" என்று தொடர்ச்சியாக மெகா ஹிட் திரைப்படங்களை தமிழ் திரையுலகத்திற்கு கொடுத்த அவருக்கு, "அருணாச்சலம்" திரைப்படத்திற்காக தமிழக அரசு வழங்கும் சிறந்த திரைப்படத்திற்கான மாநில விருது வழங்கப்பட்டது. உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான "அன்பே சிவம்" திரைப்படத்தை இயக்கியது சுந்தர் சி தான். அந்த திரைப்படம் வெளியான கால கட்டத்தில் அது பெரிய அளவில் பாராட்டப்படவில்லை என்றாலும், இப்பொழுது அது மிகப்பெரிய அளவில் வியந்து பாராட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.