இந்நிலையில் தனது 34வது பிறந்தநாளை கொண்டாட அவர் இலங்கையில் உள்ள ஒரு பிரபலமான ரிசார்டுக்கு சென்றுள்ளார். Wild Coast Tented Lodge என்ற இடத்தில் தான் அவர் தனது பொழுதை கழித்துள்ளார். வைல்ட் கோஸ்ட், கட்டடக்கலை அதிசயம் நிறைந்த ஒரு இடமாகும். இந்த ரிசார்ட் முற்றிலும் மூங்கிலால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த ரிசார்ட் பகுதியை சுற்றி இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் பல உள்ளன. அதன் அழகிய சுற்றுப்புறங்கள், அமைதியான சூழ்நிலை, ஸ்பாவில் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகள் என்று அதில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளது.