தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என்று இந்திய மொழிகள் பலவற்றுள் 1970களில் இறுதியில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வந்த ஜெயக்குமாரி, சிங்கப்பூர் சென்றபோது, அங்கு இருந்த அப்துல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகும் சினிமாவில் பெரிய நடிகையாக வலம்வந்த அவர், ஒரு கட்டத்தில் சினிமாவில் தயாரிப்பாளராக மாற முடிவு எடுத்தார். அவருடைய வாழ்க்கையில் அவர் எடுத்த மிக தவறான முடிவு அது என்றால் அது மிகையல்ல. பிரகாசம் என்பவருடைய இயக்கத்தில் ஒரு படத்தை எடுக்க அவர் முடிவு செய்தார்.
அதுவரை அவர் சம்பாதித்த அனைத்து பணமும் அந்த திரைப்படத்தில் போடப்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த படத்தை எடுக்க முடியாமல் போக தன்னுடைய வீடு வாசல் கார்களை விற்று மேலும் மேலும் அந்த படத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தார். இருப்பினும் இறுதிவரை ஒரு தயாரிப்பாளராக அவர் அந்த திரைப்படத்தில் செயல்பட முடியவில்லை. இந்த சூழலில் கடன் தொல்லை அதிகமாகி அவர் சட்ட ரீதியாக வழக்குகளை சந்தித்து சிறை சென்று திரும்பியதாகவும் கூறப்படுகிறது.