கத்துக் கொடுத்த வாத்தியாரையே கரெக்ட் பண்ணிட்டாங்க! ரம்யா பாண்டியன் காதல் கதை தெரியுமா?

First Published | Oct 20, 2024, 11:22 AM IST

Ramya Pandian Love Story : நடிகை ரம்யா பாண்டியன், லோவல் தவான் என்பவரை காதலித்து வந்த நிலையில், அவர்களது திருமணம் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது.

Ramya Pandian Love Story

ரம்யா பாண்டியன் என்று சொன்னால் நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவரின் மொட்டைமாடி போட்டோஷூட் தான். காட்டன் சேலையில் இடுப்பழகு தெரிய இஷ்டத்துக்கு போஸ் கொடுத்து அவர் நடத்திய போட்டோஷூட் தான் அவரை ஓவர் நைட்டில் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆக்கியது.

Ramya Pandian

படிப்படியாக சிம்ரனிடம் இருந்த இடுப்பழகி பட்டமும் ரம்யா பாண்டியன் வசம் சென்றது. அந்த அளவுக்கு அவருக்கு பெயரும் புகழும் அந்த போட்டோஷூட் மூலம் கிடைத்தது. இன்ஸ்டாவில் கவர்ச்சி ததும்ப ரம்யா பாண்டியன் போட்டோக்களை பதிவிட்டாலும் சினிமாவில் இதுவரை அவர் கவர்ச்சியாக நடித்ததில்லை.

Tap to resize

Actress Ramya Pandian

ரம்யா பாண்டியன் என்றாலே கிராமத்து பெண் வேடத்துக்கு செட் ஆவார் என்கிற இமேஜ் உருவானதால் அவருக்கு போதிய பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய ரம்யாவிற்கு அந்த நிகழ்ச்சி மூலமும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

Ramya Pandian Marriage

சினிமாவில் வாய்ப்பில்லாத காலகட்டத்தில் ரிஷிகேஷ் சென்ற ரம்யா பாண்டியன் அங்குள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் யோகா பயிற்சியும் பெற்று வந்தார். சில மாத பயிற்சி வகுப்புக்கும் பின்னர் அவர் யோகா டீச்சராக தகுதியானவர் என்கிற சான்றிதழும் வழங்கப்பட்டது. அதை ரம்யாவும் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார்.

இதையும் படியுங்கள்... ரகசியமாக காதலித்து கல்யாணத்துக்கு தயாரான ரம்யா பாண்டியன் - மாப்ள யார் தெரியுமா?

Lovel Dhawan, Ramya Pandian

கடந்த ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில் தான் நிச்சயம் காதல் திருமணம் தான் செய்துகொள்வேன் என சொல்லி இருந்தார் ரம்யா. அவர் சொன்னது போலவே தற்போது அவர் காதல் திருமணத்திற்கு தயாராகிவிட்டார். அவருடைய திருமணம் வருகிற நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெற உள்ளது. லோவல் தவான் என்பவரை தான் ரம்யா கரம்பிடிக்க உள்ளார்.

Lovel Dhawan

ரிஷிகேஷில் கங்கை நதிக்கரை ஓரம் அமைந்துள்ள கோவிலில் தான் ரம்யா பாண்டியனின் திருமணம் நடைபெற உள்ளது. அதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். இதையடுத்து நவம்பர் 15-ந் தேதி சென்னையில் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளார் ரம்யா. இதில் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

Ramya Pandian Lover Lovel Dhawan

சரி ரம்யா பாண்டியன் காதலிக்கும் அந்த லோவல் தவான் யார் என்று தெரியுமா... அவர் ஒரு யோகா பயிற்சியாளர். ரம்யா பாண்டியனுக்கு யோகா பயிற்சி கொடுத்ததும் அவர் தான். அப்போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. சீக்ரெட்டாக காதலித்து வந்த இந்த ஜோடி தற்போது திருமணத்துக்கு தயாராகிவிட்டது.

Yoga Instructor Lovel Dhawan

அண்மையில் ரம்யாவின் சகோதரி கீர்த்தி பாண்டியனும் காதல் திருமணம் தான் செய்துகொண்டார். அவர் நடிகர் அசோக் செல்வனை காதலித்து கரம்பிடித்தார். அவருக்கு போட்டியாக தற்போது ரம்யா பாண்டியனும் லவ் மேரேஜுக்கு ரெடியாகி உள்ளார். அதுவும் தனக்கு யோகா கத்துக்கொடுத்த வாத்தியாரையே அவர் திருமணம் செய்துகொள்ள உள்ளார்.

இதையும் படியுங்கள்... மாடர்ன் சரோஜா தேவியாக மாறி... சைடில் ஒத்த ரோசாவோடு போஸ் கொடுக்கும் ரம்யா பாண்டியன்!

Latest Videos

click me!