கடந்த 1994ம் ஆண்டு பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில், ஏ.ஆர் ரகுமான் இசையில் பிரபுதேவா மற்றும் நக்மா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "காதலன்". இந்த திரைப்படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். அதில் "பேட்ட ராப்" பாடலை மட்டும் தான் இயக்குனர் சங்கர் அவராகவே எழுதியிருப்பார். அதை தவிர மீதம் இருக்கும் எட்டு பாடல்களையும் எழுதியது வாலியும், வைரமுத்தும் தான். அதிலும் குறிப்பாக "காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்.. சின்ன தகரம் கூட தங்கம் தானே" என்கின்ற பாடலை மிக அழகாக எழுதியிருப்பார் வாலி. இதில் "பஞ்சுமிட்டாய் 5 ரூபாய், நீ பாதி தின்று தந்ததால் லட்சம் ரூபாய்" என்ற வரிகளை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது.