பாடல்கள் செம ஹிட்; படமும் சூப்பர் டூப்பர் ஹிட் - அப்படிப்பட்ட டாப் 8 தமிழ் படங்கள் இதோ!

Mega Hit Tamil Movies : தமிழ் சினிமாவில் ஒரு படமும், அதில் வரும் அனைத்து பாடல்களும் ஹிட்டாவது என்பது கொஞ்சம் அபூர்வமாக நடக்கும் நிகழ்வு தான்.

Tamil Movies

பிற மொழிகளை ஒப்பிடும்போது தமிழ் மொழி படங்களில் பாடல்களுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ் திரையுலகில் வெளியான வெகு சில படங்களில், உள்ள அனைத்து பாடல்களும், அந்த திரைப்படமும் பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. அப்படிப்பட்ட டாப் 8படங்களை இப்போது பார்க்கலாம். கடந்த 1992ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான "ரோஜா" திரைப்படத்தில் ஒலித்த அனைத்து பாடல்களும் இன்றளவும் பலர் மத்தியில் பெரும் பிரபலம். ஏ.ஆர் ரகுமானின் வாழ்க்கையில் டர்னிங் பாயிண்டாக அமைந்த திரைப்படம் இது. அதே சமயம் இப்படத்தின் கதை அம்சமும் வேற லெவலில் இருக்கும்.

"கங்குவா முதல் பாதி மிரட்டல் தான் போங்க; குஷியில் சூர்யா அண்ணன்" - ஞானவேல் சொன்ன ஹாப்பி நியூஸ்!

Alaipayuthe

அதேபோல கடந்த 2000வது ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், நடிகர் மாதவன் மற்றும் ஷாலினி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "அலைபாயுதே". நடிகர் மாதவனை பொறுத்தவரை அதுவரை பெரிய அளவில் பிரபலமடையாத நடிகராக இருந்து வந்தவருக்கு, மிகப்பெரிய நடிகர் என்கின்ற அந்தஸ்தை கொடுத்த திரைப்படம் இது. இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இன்றளவும் பலராலும் பெரிய அளவில் விரும்பப்படுகிறது. காதலர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படங்களில் அலைபாயுதே டாப் லிஸ்டில் இருக்கும்.


Kadhalan Movie

கடந்த 1994ம் ஆண்டு பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில், ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் மெகா ஹிட் ஆன திரைப்படம் தான் "காதலன்". பிரபுதேவா, நக்மா, வைகைப்புயல் வடிவேலு என்று பலருடைய நடிப்பில் வெளியான படத்தில் வரும் அனைத்து பாடல்களும் இன்றளவும் பலருக்கு விருப்பமான பாடல்களாக இருந்து வருகிறது.

Thalapathi

1991ம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் தான் "தளபதி". மோலிவுட் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நட்புக்கு இலக்கணமாக இந்த திரைப்படம் திகழ்கிறது என்றால், இளையராஜா இசையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மெகா ஹிட் பாடல்கள் ஆக மாறியது.

Vinnaithandi Varuvaya

கடந்த 2010ம் ஆண்டு பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் தான் "விண்ணைத்தாண்டி வருவாயா". திரிஷா மற்றும் சிம்பு நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் இன்றளவும் பலருக்கு மிகவும் விருப்பமான திரைப்படமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ரகுமான் இசையில் இப்படத்தில் ஒலித்த அனைத்து பாடல்களும் அவ்வளவு இனிமையான பாடல்கள்.

Rhythm

கடந்த 2000வது ஆண்டு பிரபலாக இயக்குனர் வசந்த் இயக்கத்தில், ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியான திரைப்படம் தான் "ரிதம்". பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் இல்லாமல், மிகவும் இயல்பான கதைகளத்தில் வசந்த் தமிழ் சினிமாவிற்கு கொடுத்த முத்தான படமிது. அர்ஜுன் மற்றும் மீனா நடிப்பில் மெகா ஹிட் ஆன இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே இன்றும் மக்களால் விரும்பப்படுகிறது.

Kannathil muthamittal

கடந்த 2002 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மாதவன் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "கன்னத்தில் முத்தமிட்டால்". ஈழ தமிழர்களின் கதையை சொல்லும் அற்புதமான திரைப்படமாக இது மாறியது. அதுமட்டுமல்லாமல் ஏ.ஆர் ரகுமான் இசையில் இப்படத்தில் ஒலித்த அனைத்து பாடல்களும் மெகா ஹிட் பாடல்கள். விஸ்வநாதன் குரலில் ஒலித்த "விடை கொடு எங்கள் நாடே" என்கின்ற பாடல் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது.

Vaaranam Aayiram

கடந்த 2008 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "வாரணம் ஆயிரம்". சூர்யா, சிம்ரன், ரம்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை இந்த திரைப்படம் பெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தில் வெளியான எல்லா பாடல்களுமே காலம் கடந்து இன்றளவும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

90ஸ் முதல் 2K வரை - பஞ்சுமிட்டாயை வைத்து கோலிவுட்டில் மெகா ஹிட்டான காதல் பாடல்கள்!

Latest Videos

click me!