This Week Theatre Release Movies : அக்டோபர் முதல் வாரமே தொடர் விடுமுறை வருவதால், திரையரங்குகளில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா உள்பட 5 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவுக்கு செப்டம்பர் மாதம் மண்டாடி, மீசைய முறுக்கு 2, டோரதி போன்ற வெற்றிப் படங்கள் கிடைத்திருந்தது. அதில் மண்டாடி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது. இதையடுத்து தற்போது அக்டோபர் மாதத்திற்குள் அடியெடுத்து வைக்க உள்ளது கோலிவுட். இம்மாதமும் நிறைய புதுப்படங்கள் ரிலீசுக்கு வரிசைகட்டி காத்திருக்கின்றன. அந்த வகையில் அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் 5 படங்கள் தியேட்டருக்கு வர உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அக்டோபர் 1ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ள படம் பத்தா. இப்படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்திருக்கிறார். இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
36
ஏழு கடல் ஏழு மலை
பத்தாவுக்கு போட்டியாக அக்டோபர் 1ந் தேதி ரிலீஸ் ஆகும் மற்றொரு திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. இப்படத்தை ராம் இயக்கி உள்ளார். இப்படத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சூரி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று சிக்மா படம் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் முக்கியமான ஹைலைட் இயக்குநர் தான். தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தான் சிக்மா படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
56
அன்பில் அவன்
அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள படம் அன்பில் அவன். அப்படத்தில் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை ரேவதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு திருமணமான ஜோடி, நல்லதொரு வாழ்க்கையை தொடங்க நினைக்கும் போது அவர்களது வாழ்க்கையில் ஒரு எதிர்பாராத பிரச்சனை வருகிறது. அதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் கதைக்கரு. இப்படம் அக்டோபர் 2ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
66
டோண்ட் டிரபிள் தி டிரபிள்
ஷஷாங் எலேட்டி இயக்கத்தில் பஹத் பாசில் ஹீரோவாக நடித்துள்ள படம் டோண்ட் டிரபிள் தி டிரபிள். இப்படமும் அக்டோபர் 2ந் தேதி திரைக்கு வருகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ராஜமெளலி, சூர்யா போன்ற ஜாம்பவான்கள் கலந்துகொண்டதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.